பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இரும்பொறைக்குத் தீங்கு விளையும் என்று தெரிந்து உளந்திடுக்குற்றார். புலவர் அஞ்சியதற்கேற்பவே அற்றைக்கு ஏழாம் நாளில் அவ்வேந்தன் உயிர் நீத்தான். இச் செய்தி கூடலூர் கிழார் பாடிய 226 ஆம் புறப்பாடலால் புலனாகின்றது.

நாள், புள் முதலியவற்றின் இயக்கம், குரல் முதலிய நிமித்தங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் நிகழவிருக்கும் செய்திகளை முன்னரே அறிந்து அவற்றுக்குத் தக நடந்து கொள்ளும் சோதிட உணர்வும் அது பற்றிய நம்பிக்கையும் தொல்காப்பியனார் காலம் முதல் தமிழகத்தில் நிலைபெற்று வருகின்றதென்பது,

"அச்சமும் உவகையும் எச்சமின்றி

நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் காலங் கண்ணியுவோம்படையுளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே” (தொல், புறத், 30)

எனவரும் புறத்திணையியற் சூத்திரப்பகுதியாலும்;

“புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்

விதுப்புற லறியா ஏமக்காப்பினை” (புறம். 20)

எனப் புள்ளைக் குறித்தும்,

"திசையிரு நான்கும் உற்கம் உற்கவும்

பெருமரத் திலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும் வெங்கதிர்க் கனவி துற்றவும் பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும் எயிறு நிலத்து வீழவும் எண்னெ யாடவும் களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும் வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் கனவின் அரிய காணா நனவிற் செருச் செய் முன்பதின் வருதிறன் நோக்கி மையல் கொண்ட ஏமமில் இருக்கையர்” (புறம். 41)

எனக் கனவு முதலிய பிற நிமித்தங்கள் பற்றியும் வரும்