பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

137


புறப்பாடற் பகுதிகளாலும் நன்கு புலனாம். எட்டுத் திசைகளிலும் விண்மீன்கள் எரிந்து வீழ்தலும், பெரிய மரத்தின் கண்ணே இலையில்லாது கிளைகள் பட்டுப் போதலும், கதிரவன் தனக்குரிய திசையியக்கத்திற் பிறழ்ந்து தோன்றுதலும், அஞ்சத் தகுவனவாகிய பறவைகள் குரலெழுப்புதலும் நனவு நிலையிலே தோன்றும் நிமித்தங்கள் எனவும், நிலத்திற் பல் வீழவும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும், பன்றியை வாகனமாகக் கொள்ளவும், உடுத்த ஆடை அவிழவும் படைக்கலம் தானிருந்த கட்டிலுடனே முறிந்து வீழவும் கனாக் காண்டல், கனவில் நிகழும் தீ நிமித்தங்கள் எனவும் மேற்காட்டிய 41ஆம் புறப்பாடலிற் கோவூர் கிழார் குறித்துள்ளமை அவர்கால மக்களது நம்பிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளமை காணலாம்.

நாம் வாழும் உலகினை நடுவாகக் கொண்டு, இதன்மேலும் கீழும் உள்ள உலகங்களைக் கூட்டி மூவகை யுலகம் என வழங்கும் மரபு சங்ககாலத்தில் நிலவியது. நாம் வாழும் நிலையில் நடுநிலைக் கண்ணதாகிய இவ்வுலகின் மேலும் கீழும் எவ்வேழுலகங்கள் உள்ளன எனவும் இவ்வுலகினைச் சேர்த்து ஏழுலகங்கள் நடுவேயுள்ளன எனவும் அக்கால மக்கள் நம்பினர். என்பது,

"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅதுருகெழு குமரியின் தெற்கும் குணா.அது கரைபொரு தொடுகடற் குணக்கும் கீழது, முப்புணரடுக்கிய முறைமுதற்கட்டில் நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது ஆனிலை யுலகத்தானும்” (புறம், 6)

எனவரும் புறப்பாடலாலும் வடக்கின் கண்ணது பனிதங்கிய ந்ெடிய இமய மலையின் வடக்கும், தெற்கின் கண்னது உட்குந் திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும், கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற, சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும், மேல் கண்னது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும் கீழதாகிய நிலமும் ஆகாயமும் சுவர்க்கமும் என மூன்றுங் கூடிய புணர்ச்சியாக