பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற் கட்டாகிய நீர் நிலைக்கண் ஓங்கிய நிலத்தின் கீழும், மேலதாகிய கோலோகத்தின் கண்ணும் எனவரும் அதன் உரையாலும் இனிது புலனாகும். இவ்வாறு நடுவும் கீழும் மேலும் ஒரோவென்று எழுவகைப்பட்ட மூன்றுலகம் உண்மை,

'மூவே ழுலகம் உலகினுள் மன்பதும்

ஆயோய்" (மூன்றாம் பரிபாடல் 9, 10 அடிகள்)

எனவும்,

“இருநிழல் படாமை மூவேழுலகம்

ஒருநிழலாககிய ஏமத்தை மாதோ’ (மேலது. 75,76)

எனவும்,

“நின்மருங்கின்று மூவேழுலகமும்” (பரி. 13:23)

எனவும் வரும் பரிபாடற் பகுதிகளால் இனிது விளங்கும்.

கூற்றம்

சங்கச் செய்யுட்களில் கூற்றுவனைக் குறிக்கும் பாடல்கள் மிகதியாக உள்ளன. காலன், மடங்கல், ளுமன், மறலி ஆகி சொற்கள் கூற்றத்தைக் குறித்து வழங்குகின்றன. உடம்பையும் உயிரையும் கூறுபடுத்துப் பிரித்துவைக்கும் தெய்வ ஆற்றல் கூற்றம் என்னும் பெயரால் வழங்கப்படுவ தாயிற்று. இவ்வுலகில் உடம்பும் உயிரும் வேறு வேறு தன்மையன எனவும் ஐம்பெரும் பூதங்களாலாகிய இவ்வுலகத்துப் புல் முதல் மக்களிறாகவுள்ள பல்வேறு உயிர்த்தொகுதிகளும் யாக்கை, இளமை, நுகர்ச்சி முதலிய பல திறத்தானும் நிலையாமை உடையனவாக இவ்வுலகம் அமைந்துள்ளது எனவும் தமிழ் முன்னோர் தம் வாழ்வியல் அனுபவத்தில் கண்டுனர்ந்தனர். 'பல்லாற்றானும் நில்லாவுலகம்’ என்றார் தொல்காப்பியனார். அறிதற் றன்மையும் நிலைபேறும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற உயிர்த் தொகுதியும் அவ்வுயிர்களின் நிலைக்களமாய் அறிவின்மையும் நிலையாமையும் உடையனவாகிய பல்வேறு உடம்புகளும் தம்முள் வேறுபட்ட இயல்பினவாகும். எல்லாக் காலத்தும் உயிர்கள்தாம் பெற்றுள்ள ஒரே உடம்புடன் தொடர்ந்து