பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

139


நிலைத்திருத்தல் இல்லை. உயிர்கள் தம் வாழ்க்கை நுகர்ச்சிக்கெனப் பெற்றுள்ள உடம்புகளினின்றும் அவற்றின் நுகர்ச்சிக்காலம் முடிந்த பின்னர் அவ்வுயிர்களைக் கூறுபடுத்துப் பிரிக்கும் தெய்வ ஆற்றலே கூற்றம் எனப்படும். இத்தகைய கூற்றத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையோர் மன்னுயிர்த் தொகுதியில் ஒருவரும் இலர். இதுபற்றியே மாற்றருங் கூற்றம்’ என அடை புணர்த்தினார் தொல்காப்பியர். மாற்றருங் கூற்றம் உயிர்கவருந்தனது தொழிலை யாவராலும் மாற்றுதற்கு அரிய ஆற்றலுடையது என்பதாம். உடம்பையும் உயிரையும் கூறு படுத்துதலால் கூற்றம் எனவும் உயிர்களது வினை நுகர்ச்சியின் முடிவாகிய காலம் அறிந்து செயல்படுதலால் காலன் எனவும் உடம் பொடு கூடி வாழ்வியலில் படரும் உயிரை அதன் ஆற்றல் ஒடுங்குமாறு உடம்பினின்றும் பிரித்துத் தொழிலின்றி மடங்கியொடுங்கச் செய்தலால் மடங்கல் எனவும் உயிர்கள்பால் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் நின்று உடம்பினின்றும் உயிரைப் பிரித்தலாகிய தன் தொழிலைச் செய்தலால் ளுமன் எனவும் எத்தைைகய ஆற்றல் உடையராயினும் அவர்களொடு முரண்பட்டு அவர் உயிரைப் பிரித்தலின் மறலி எனவும் சங்க இலக்கியங்களில் கூற்றம் குறிக்கப்பெற்றுள்ளது.

உயிர் தான் பெற்றுள்ள உடம்பினின்றும் பிரியுங் காலத்தைச் சாதல் எனவும் மற்றோர் புது உடம்பிற் புகும் நிலையைப் பிறத்தல் எனவும் இங்ங்ணம் சாதற்கும் பிறத்தற்கும் காரணமாயமைந்தது அவ்வுயிர்கள் உடம்பொடு கூடி நின்ற காலத்துச் செய்த நல்லனவும் தீயனவுமாகிய வினைத் தொகுதி எனவும் தமிழ் முன்னோர் உயிர் களின் வாழ்வியல் துட்பங்களை நுனித்து உணர்ந்த னர். அவ்வுணர்வின் பயனாக ஒர் உயிர் தான் பெற்றுள்ள உடம்போடு உலகம் உள்ள வரை நிலைத்திருத்தல் இயலாது என்பதும் வினைப்பயனுக்குத்தக அவ்வுயிரை உடம்பினின்றும் வேறுபடுத்தும் கூற்றம் உண்மை பொய்யன்று என்பதும் ஆகிய உண்மையினைத் தம் உள்ளத்துத் தெளிந்தனர். இவ்வுண்மை,