பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

141


கானலாம்.

உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் ஆற்றலைக் கூற்றம் என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித்தார். அவர் குறித்த கூற்றத்தை அவருக்குப் பின் வந்த சான்றோர், காலன், மடங்கல், ளுமன், மறலி எனப் பல்வேறு காரணப் பெயரிட்டு வழங்கினர். இங்ங்ணம் கூற்றுக்குப் பல பெயர்கள் வழங்கிய நிலையில் தலைமையுடையதும் அதன் ஏவல் செய்வதும் எனக் கூற்றத்தின் ஆற்றலை இருவகையாகப் பகுத்துரைக்கும் மரபு இடம் பெறுவதாயிற்று.

“தாமா இருவரும் தருமனும் மடங்கலும் எனவரும் பரிபாடல் (3) அடியில் குறிக்கப்பெற்ற தருமன் என்பானைத் தலைமையுடைய யமன் எனவும் மடங்கல் என்பதனை அவனது ஏவல் செய்யும் கூற்றம் எனவும் கொள்வர் பரிமேலழகர்.

‘மடங்கல் போற் சினை.இ மாயஞ் செய்யவுனரை’ எனவரும் தொடரில் உள்ள மடங்கல் என்னும் சொல்லுக்குக் கூற்று எனப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். ஒடுக்கம் என்ற பொருளில் உள்ள மடங்கல் என்னும் இச்சொல் யமனுக்கு ஏவல் செய்யும் கூற்றம் என்ற பொருளினும் கலித்தொகையில் (150 ஆம் பாடல்) ஆளப் பெற்றுள்ளது. தருமனாகிய இயமனுக்கும் அவனது ஏவல் செய்யும் கூற்றத்திற்கும் இடையேயுள்ள இத்தொடர்பினை,

“சாற்று நாளற்றதென்று தருமராசற்காய் வந்த

கூற்றினை” (4.49. 2)

என வரும் திருநாவுக்கரசர் திருநேரிசைத் தொடரால் இனிதுணரலாம். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலைக் கூற்று எனவும் காலத்தால் தூண்டப்பட்டுக் கூற்றுவனது ஏவல் செய்யும் துணையாற்றலைக் காலன் எனவும் கொள்ளுதல் தகும். இங்ங்னம் உடம்பினின்றும் உயிரைப் பிரித்தற்குத் துனை செய்வது, காலக் கடவுளாகிய இறைவன் கையின் கண்ணதாய் ஊழி முடிவின்கண் அவன் ஏவலால் உயிர்த்திறமேல் திரியும் கணிச்சியாகும். இந்நுட்பம்,