பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

143


தெளியப்படும். அத்தகைய பெருந்துன்பத்தை விளைவிப்பது கூற்றுவனின் தொழிலாதலின் உலகில் நல்லறஞ் செய்தோரது உயிரைக் கூற்றங்கவர்ந்த நிலையில் நல்லோர் பிரிவால் அல்லலுற்ற சான்றோர்கள் தம்முள்ளத்தெழுந்த துன்ப மிகுதியால் 'அறனில் கூற்றம்’ (புறம். 237), நனிபேதையே நயனில் கூற்றம்’ (புறம். 227) என்றாங்குக் கூற்றத்தின் செயலை இகழ்ந்துரைத்தலும் உண்டு.

கூற்றத்தினைக் குறித்து வழங்கும் பெயர்களுள் ஒன்றாகிய மடங்கல் என்னுஞ் சொல் புறத்தே தோன்றிய பொருள் மீண்டும் அகத்தே ஒடுங்குதல் என்ற பொருளில் இறைவன் செய்யும் ஒடுக்கம் என்னும் தொழிலைச் சுட்டிய இயற்பெயராய் அவ்வொடுக்கத்தின் ஒரு பகுதியாய் உடம்பினின்றும் உயிரைப் பிரித்தலாகிய தொழிலை நிகழ்த்தும் கூற்றத்திற்கு ஆகுபெயராயிற்று. முதலாம் பரிபாடலில்,

“ஐந்தலையுயரிய அணங்குடையருந்திறல்

மைந்துடை யொருவனுமடங்கலும் நீ"

என வரும் தொடரில் மடங்கல்’ என்னும் சொல் சிவபெருமான் செய்தருளும் தொழில்களுள் ஒடுக்கமாகிய அழித்தற்றொழிலைக் குறித்து நின்றது. இத்தொடரில் 'ஐந்தலையுயரிய அணங்குடையருந்திறல் மைந்துடை ஒருவன்’ என்பதற்கு ஐந்துதலையைத் தோற்றுவித்த அருந்திறலையுடைய ............. ஈசன்’ எனவும் மடங்கல்’ என்பதற்கு அவனினாகிய உலகுயிர்களின் ஒடுக்கம்’ எனவும் பரிமேலழகர் விளக்கம் தந்துள்ளார். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் மடங்கல் என்னும் சொல், உலகினைத் தோற்றுவித்துப் பல்லுயிர்க்கும் ஏற்ற உடம்பினைப் படைத்தளித்த இறைவன், உலகுயிர்களாகிய அவற்றை மீளவுந் தன்கண் ஒடுங்கச் செய்தலாகிய ஒடுக்கத்தைக் குறித்து நின்றதென்பது நன்கு விளங்கும். எனவே உலகுயிர்களை முற்ற ஒடுக்குதலாகிய மகா சங்காரத் தொழிலை நிகழ்த்து பவன் ஐம்முகக் கடவுளாகிய சிவபெருமானே என்னும் கொள்கை திருமாலடியார்களாலும் ஏற்றுக் கொள்ளப்