பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

145


தெளிந்துனர்த்திய வாழ்வியற் கோட்பாடுகளாகும். உயிர்கள் இப்பிறப்பிற் செய்த நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆகிய வினைப் பயன்களை இப்பிறப்பில் நுகராது போனால் இனி கரும் பிறப்புக்களிலாயினும் நுகர்ந்தே கழித்தல் வேண்டும் என்னும் வினைக் கொள்கையினை அடிப்படையாகக் ல்ண்டு தோன்றியதே மறுபிறப்புண்மை :ென்னும் கோட்பாடாகும். இக்கொள்கை சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழக மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுக் கொள்கையாய் நிலவியது. எனினும் இக் கொள்கையினையுடன்படாது முரணிய கோட்பாடுடையார் சிலரும் அக்காலத்திருந்தனர். இங்ங்ணம் மறுபிறப்புண்மை யினை யுடன்படாமையினைச் சங்ககாலச் சான்றோர்கள் ஒரு பெருங் குற்றமாகக் கருதவில்லை. ஆனால் உலக வாழ்க்கையில் ஒருவர்தாம் நல்வினை காரணமாக இன்பத்தையும் தீவினை காரணமாகத் துன்பத்தையும் உறுதியாக நுகர்ந்தே தீர்வர் என்னும் வாழ்க்கை நியதியாகிய வினைக் கொள்கையினை மறுத்துத் தம் மனம் போனவாறு விரும்பியன செய்து திரிவாராயின் அவரது ஒழுகலாற்றினால் மக்கள் வாழ்க்கையின் கட்டுக்கோப்புக் குலையும். அதனால் அரசியல் நெறிமுறையும் நாட்டு மக்களது நல்வாழ்வும் சிதைந்து கெடும். எனவே வினைக் கொள்கையாகிய வாழ்வியல் முறைமையினை மறுத்துத் தம் மனம்போனவாறு ஒழுகும் தீயோராகிய சிற்றினத்தாரைச் சேர்ந்தொழுகுதல் கூடாது எனவும் தீவினை புரிந்தோரை ஒறுத்தலும் நல்லறம் புரிவோரைப் பாதுகாத்தலும் ஆகிய நெறிமுறைமையிற் சோர்வுபடாது ஆட்சி புரிதல் வேண்டும் எனவும் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர் வேந்தர்க்கு அறிவுறுத்தி வந்தனர். இச்செய்தி,

“கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்

ஒடியாமுறைமையின் மடிவிலையாகி தலைதல் லனுந் தீயதன் தீமையும் இல்லையென்போர்க்கினனாகிலியர்’ (புறம் 29)

எனச் சோழன் நலங்கிள்ளியை நோக்கி உறையூர் முதுகண்னன் சாத்தனார் பாடிய புறப்பாடற் பகுதியில் இடம் பெற்றுள்ளமை காண்க.

قناة . . ، "... , . . . . . ند