பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவிற்

பிறப்புப் பிறிதாகுவதாயின் மறக்கு வென்கொல் என் காதலன் எனவே' (நற். 397)

எனவும்,

"இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியாரன் கணவனை

யானா கியர்நின் நெஞ்சநேர் பவளே” (குறு. 49)

எனவும் வரும் சங்கப் பனுவற் பகுதிகள் மறுப்பிறப்பு உண்டு என்பதில் பண்டைத் தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

நடுகல் வழிபாடு

தாம் வாழும் நாட்டின் அரசியல் ஆட்சிமுறை யினைப் பாதுகாக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் தமது இனியவுயிரையும் பொருட்படுத்தாமல் பகைவரொடு பொருது உயிர்துறந்த தறுகண் மறவர்களைத் தெய்வமாகப் பேணி அ ர்தம் பெயரையும் பெருமையையும் இல்லிற் பொறித்து, அக்கல்லினைத் தெய்வமாக நிறுத்தி வழிபடும் நடுகல் வழிபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்திற் சிறந்து விளங்கியதென்பது முன்னர்க் குறிக்கட் பெற்றது. இவ்வழிபாடு சங்கச் செய்யுட்களிற் பலவிடங்களில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. நடுகல் வழிபாடு பற்றிய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குங்கால் சங்கத் தொகை நூல்கள் இயற்றப்பெற்ற காலம், தமிழகத்திற் பலவிடங் களிலும் மிகுதியாகப் போர்கள் நிகழ். காலம் .து உய்த்துணரப்படும்.

தம்முடன் முரண்பட்ட ,ெ போர் நிகழ்த்த எண்ணிய மன்னர்கள் அவர் நாட்டின் மேற் படையெடுத்துச் செல்வதற்கு முன், அந்நாட்டில் வாழும் பசுநிரைகளுக்கும் பெண்டிர் பிணியாளர் அந்தணர் முதலிய எளியோர்க்கும் போரினால் தீங்கு நேராத வண்ணம், அவர்களை அத்