பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த வுரைய னாகி உரிகளை யரவமானத்தானே அரிதுசெல்லுலகிற் சென்றனன்; உடம்பே கானச் சிற்றியாற் றருங்கரை காலுற்றுக் கம்பமொடு துளங்கிய இலக்கம் போல அம்பொடு துளங்கியாண்டொழிந்தன்றே: உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே மடஞ்சால் மஞ்ஞை யணிமயிர் சூட்டி இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்

33

படஞ் செய்பந்தர்க்கள் மிசையதுவே (புறம். 260)

எனவும்,

"நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை

விரகறியாளர் மரபிற் சூட்ட நிரையிவட் டந்து நடுகல் லாகிய வென்வேல் விடலை” (புறம். 261)

எனவும் வரும் புறப்பாடல்களால் இனிது புலனாம்.

மிக்க அணிமையையுடைய ஊர் முன்னாகச் செய்யப் பட்ட போரின் கண்னே தோன்றித் தன்னுடைய ஊரின்கண் மிக்க பசுநிரையைக் கவர்ந்து கொண்ட வெட்சி மறவர் எய்த அம்பு வெள்ளத்தைத் தன்னுடைய துடியே புனையாகக் கொண்டு கடந்து பகைவரைக் கொன்று அவர்கொண்ட ஆனிரையை மீட்டு, உலகம் ஒளியின்றிப் புலம்பப் பாம்பின் வாய்ப்பாட்டுப் பின்னர் அப்பாம்பின் கரிய எயிற்றினின்றும் பிழைத்துப் போந்த திங்களைப் போல வெட்சி மறவர் கையினின்றும் பிழைத்துப் போந்த கன்றையுடைய பலவாகிய பசுக் கூட்டத்துடனே மீண்ட புகழையுடையனாகிச் சட்டை கழற்றிய பாம்புபோலச் செல்லுதற்கரிய உயர்ந்த தேவ ருலகத்தின்கண் போயினான்; அவனது உடம்பு காட்டிலே