பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கற்கை தொழுஉச் செல் பான, தெய்வமாய் நின்றான் திசைக்கு’ (பு. வெ. மா. 252) எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைத் தொடராகும்.

பருக்கைக் கற்கள் நிரம்பிய வழியிடத்தே வீரருடம்பை யடக்கஞ் செய்து அங்கே அவர்தம் பெயர் பொறித்த கல்லை நட்டு மரல் நாரால் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே அழகிய மயிலினது பீலியையும் சூட்டி வழிபடுவர் (புறம். 264). மறக்குடியிற் பிறந்த மகளிர் தம் குடியிற்றோன்றிப் போரிற் பகைவரைப் புறங்கண்டு இறந்துபட்ட வீரர்களுக்கென நடப்பட்ட நடுகல்லினைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு விருந்தினரை ஒம்பும் நிலையில் தம்மனை வாழ்க்கை பெறவும், தம் கணவன் பகைவரை வென்று சிறக்கவும் அத் தெய்வத்தினை வேண்டிக் கொள்ளுதல் உண்டு. இச் செய்தி,

g

'களிறு பொரக்கலங்கு கழன்முள் வேலி அரிதுண் கூவல் அங்குடிச் சீறுார் ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை நடுகற் கை தொழுதுபரவும் ஒடியாது விருந்தெதிற் பெருகதில் யானே என்னையும்

  • * * * * * * * * * * * * * * * * * - - - - - - வேந்தனோடு நாடுதரு விழுப்பகை யெய்துக வெனவே” (புறம் 306)

எனவரும் புறப்பாடலில் இடம் பெற்றுள்ளமை காணலாம். போர் மறவர்கள் வாழும் சிற்றுார்களில் ஊர்ப்புறத்தே நடப்பெற்ற நடுகற்களுக்கு நாள்தோறும் நன்னீராட்டி நாட்டலியூட்டி நறும்புகை காட்டிச் செய்யும் வழிபாட்டின்கண் நெய்யுடன் கலந்து புகைத்து நறும்புகை வானிற் பரவி ஊரின் தெருக்களெல்லாம் கமழும்படி சிறப்பாக நிகழ்த்தப் பெற்றது. இச்செய்தி,

“இல்லடு கள்ளின் சில்குடிச் சீறுர்ப் புண்.நடு கல்லின் நாட்பலியூட்டி :ன்ாரோட்டி நெய்ந் நறைக் கொளி இய

மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்