பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நடுகல்லில் வீரனைத் தெய்வமாக நிறுத்தி நீராட்டுதலின், அந்நீர், தெய்வத்திருவுருவத்திற்கு ஆட்டிய திருமஞ்சன நீர்போலத் தீர்த்தநீராகக் கருதப்பெற்றது. இச் செய்தி,

“பல்லா பெயர்த்து நல்வழிப்படர்ந்தோன்

கல்சொரிந்தாட்டிய நீரே தொல்லை வான் வழங்கு நீரினுந் தூய்தே யதனாற் கண்ணி ரருவியுங் கழிஇத் தெண்ணீராடுமின் தீர்த்தமா மதுவே”

(தொல். புறத். சூ. 5)

எனவரும் நச்சினார்க்கினியர் உரை மேற்கோளால் நன்கு விரித்துரைக்கப் பெற்றமை காணலாம்.

இவ்வாறு தம்மூர்ப் பசுநிரையை மீட்டற் பொருட்டும் தம் நாடுகாத்தற் பொருட்டும் பகைவரோடு பொருது உயிர் துறந்த வீரர்களுக்கு நடுகல் அமைக்கப்பட்டமை போன்று, உலகத்து மக்கட்பண்பு நிலைபெற்று வளர்தல் வேண்டும் என்னும் உணர்ந்த குறிக்கோளுடன் உண்ணா நோன்பினை மேற்கொண்டு வடக்கிருந்து உயிர் துறந்த சான்றோர் களுக்கும் நடுகல் நிறுத்தி தெய்வமாகக் கொண்டு வழிபடும் வழக்கமும் சங்ககாலத்தில் நிலை பெற்றிருந்தது. உண்ணா நோன்பினை மேற்கொண்டு வடக்கிருந்து உயிர்துறந்த கோப் பெருஞ் சோழனுக்கு நடுகல் அமைக்கப் பெற்றிருந்தமையும், அவருடைய ஆருயிர் நண்பராகிய பொத்தியார் நடுகல்லாகி யும் தமக்கு இடங்கொடுத்த கோப்பெருஞ்சோழனை நெஞ்சம் நெகிழ்ந்து போற்றிய செய்தியும்.

“கெடுவில் நல்லிசை குடி

நடுகல்லாயினன் புரவலன்” (புறம். 221)

எனவும்,

"பலர்க்கு நிழலாகியுலக மீக் கூறித்

தலைப் போகன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுகல்லாகியக் கண்ணும் இடங்கொடுத்தளிப்பு மன்ற வுடம்போ