பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சிவலிங்கங்கள், வையத்துப் புகழுடன் வாழ்ந்த மனிதன் இவன் என அவனுடைய பெயரும் பெருமையும் கூறும் நடுகல் என்ற அளவில் அமையாது, மனிதனாக வாழ்ந்தவன் சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்து தெய்வமாகத் திகழ்கின்றான் என்ற சமயத்தத்துவ வுண்மையைப் புலப்படுத்தும் முறையில் வளர்ச்சி பெற்றுள்ள திறம் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.

தமிழின மக்களிடையே இறந்தோர்க்குச் செய்யும் இறுதிச் சடங்குகளில் நெடுங்காலமாக நிலைபெற்று வருவது கரும முடிவிற் கல்நிறுத்தி நீர்ப்படை செய்யும் இறுதிச் சடங்காகும். இது தமிழ் முன்னோர் மேற்கொண்டு நிகழ்த்திய நடுகல் வழிபாட்டினைப் பின்வரும் வழிமுறை யினர்க்கும் நினைவுபடுத்தும் முறையில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றதென்பதனைத் தமிழகத்தின் தொன்மை வரலாற்றின் தொடர்புணர்ந்தோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்பது திண்ணம்.

தறுகண் வீரர்களுக்குக் கல் நிறுத்தி வழிபடும் வீரர் வழிபாடு சிற்றுார்கள் தோறும் நிலைபெற்றிருந்தமை சங்க இலக்கியங்களால் நன்கு புலனாகின்றது. இவ்வீரர் வழிபாட்டினைத் தவிரப் பிற்காலத்தில் ஊர் தோறும் நிலைபெற்றுள்ள கிராம தேவதையெனப்படும் சிறுதெய்வ வழிபாடுகளைப் பற்றிய குறிப்புக்கள் எவையும் சங்கச் செய்யுட்களிற் காணப்படவில்லை.

தம் குடியில் இறந்த வீரர்களைத் தெய்வமாகக் கொண்டு கல்நிறுத்தி வழிபடும் முறையிற் பொதுவாகக் குறிக்கப்படும் வீரர் வழிபாடே பிற்காலத்தில் தோன்றி அருஞ்செயல் புரிந்து ஆங்காங்கே புகழுருவில் நிலவிய மதுரை வீரன் முதலிய வீரர் பலருடைய சிறப்புப் பெயர்களால் பலவாக விரிவு பெற்றது.

தமிழ் மறவர்கள் வீரம் வேண்டி வழிபட்ட தாய்த் தெய்வமாகிய கொற்றவை வழிபாடே, தியோரை ஒறுக்கும் பேயினைச் சுற்றமாகக் கொண்ட காளி, ஊரெல்லையைக் காக்கும் பிடாரி எனப் பல்வேறு பெயர்களாற் குறிக்கப்