பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

159


பெறுவதாயிற்று. அருமழை தரல் வேண்டில் தரவல்ல ஆற்றல் வாய்ந்த பத்தினிப் பெண்டிர் வழிபாடு பிற்காலத்தில் எழுவர் நங்கையர் (சத்தமாதர்) வழிபாடாகவும்,மாரியம்மை முதலிய அன்னை வழிபாடாகவும் பல்வே வழிபாடுகளாக விரிவுபெற்றது.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சிறப்பிடம் பெற்றுள்ள சாத்தன் வழிபாடு சங்கச் செய்யுட்களிற் காணப்படவில்லை. சாத்தன் என்ற சொல் முற்காலத்தில் பிறநாடுகளிற் சென்று வணிகம் புரிவார்க்கு உதவியாக வேந்தர்களால் அனுப்பப்பெற்ற வீரர்திரளின் தலைவனைக் குறித்து வழங்கும் பெயராகும். நாட்டில் வணிகர் கூட்டத்தார் மன்னனால் நன்கு மதிக்கப்பெற்ற காலத்திலே வீரர் வழிபட்டினையடுத்துச் சிறப்பாக வணிகச் சாத்தின் தலைவ னாகிய வீரனைப் பிடாரி முதலிய ஊர்க்காவற் றெய்வங்களுள் ஒன்றாகக் கொண்டு கோயிலமைத்து வழிபடும் வழக்கம் நாளடைவில் தோன்றி நிலைபெறுவதாயிற்று.

தொடக்க காலத்தில் சமய வேறுபாடின்றிச் சமணர் புத்தர் முதலியோராலும் வேத வழிப் பட்டோராலும் வழிபடப் பெற்ற சாத்தன் என்னுந் தெய்வம் வேத முதலிய மகா சாத்திரங்களை யுனர்ந்தோன் என்ற முறையில் சைவ வைணவ சமயத்திற்குரியதாகிப் பிற்காலத்தில் திருமாலையும் சிவனையும் தாயுந் தந்தையுமாகக் கொண்டு பிறந்தருளியவன் (அரிகரபுத்திரன்) ஐயனார் என்னும் புரானக் கதையினையும் பெற்றுச் சிற்றுார்கள் தோறும் நிலைத்த இடத்தினைப் பெற்றுவிட்டது.

“சாத்தன் என்ற தெய்வம் சங்க காலத்தில் இந்துமத தெய்வமாக இருந்திருக்கவில்லை. பிடவூரிலிருந்த அறச்சாத்தன் என்ற தெய்வம் சேக்கிழார் காலத்தில் சைவர்களின் தெய்வமாக இந்து மத தெய்வ வரிசையில் இணைக்கப்பட்டது”

என்பாரும் உளர். 395ஆம் புறப்பாடலிற் கூறப்படும் பிடவூர்

1. பி. எல். சாமி, தமிழிலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு, ப. 13.