பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

161


வைதிக சமயத் தெய்வம் எனக் கொள்ளுதலே பொருத்த முடையதாகும். ஊர் காவற்றெய்வமாகிய சாத்தன் முதலாக சிற்றுர் மக்களால் வழிபடப் பெறும் சிறு தெய்வ வழிபாடுகள் அனைத்தையும் ஒருங்கினைத்து ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்’ என்னும் பெருந்தெய்வ வழிபாட்டினை உருவாக்கும் நிலையில், காடு கிழாள் (காடுகாள்) முதலிய தாய்த் தெய்வங்களை இறைவனுக்குச் சத்தியாகவும் சாத்தன் முதலிய காவற்றெய்வங்களை இறைவனுக்கு மக்களாகவும் இணைத்த நிலையில், அவை முழுமுதற் பொருளைச் சார்த்தி வழிபடப்பெறும் சார்புநிலைத் தெய்வங்களாயின எனக் கருத வேண்டியுளது.

“இன்று கிராமங்களிற் காணப்பெறும் ஐயனார் வழிபாட்டில் பழங்குடி மக்களின் சாதவாகனன் வழிபாடும் பெளத்த சைனரின் சாத்தன் வழிபாடும், சைவரின் சிவபெருமான் மகனின் வழிபாடும் கலந்திருப்பதைக் காண்கின்றோம்"

என்பர். இவ்வாறு கூறுவதை விடத் தமிழ்நாட்டில் முற்காலத்தில் எல்லைத் தெய்வமாக அமைக்கப் பெற்ற சாத்தன் வழிபாடு சமய வேறுபாடின்றிப் புத்தர் சமனர் முதலிய எல்லா மக்களாலும் மேற்கொள்ளப்பெற்றதெனவும், அது கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் தமிழகத்தின் பெருந்தெய்வ வழிபாடுகளாகிய சிவ வழிபாட்டுடனும், திருமால் வழிபாட்டுடனும் இைைனக்கப் பெற்றதெனவும் கொள்ளுதலே ஏற்புடையதாகும்.

சிவபெருமானுக்கு மூத்த புதல்வராகிய யானைமுகப் பிள்ளையார் வழிபாடு சங்கச் செய்யுட்களில் இடம் பெறவில்லை. அதனைப் போன்றே எல்லைத் தெய்வமாகிய சாத்தனார் வழிபாடும் இடம்பெறவில்லை. சங்ககாலத்தில் உயிர்ப்பலியிட்டு வணங்கும் முறையில் நிலவிய காளி யென்னும் அன்னை வழிபாட்டையும் கற்புடைத் தெய்வ மாகிய பத்தினி வழிபாட்டையும் நடுகல் நிலையில் வழிபடப் பெற்ற வீரர் வழிபாடுகளையும் மூலமாகக் கொண்டே

2. பி. எல். சாமி, தமிழிலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, ப. 37.

ασκr. 3η στ. τιμ. 11