பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

163


தெய்வமாக வைத்தெண்ணப்படும் மாயோன், அவனது உந்தித் தாமரையில் தோன்றிய நான்முகன், மாயோன் மகனாகிய காமன், ஆயிரம் கண்னோனாகிய இந்திரன் ஆகிய தெய்வங்களின் திருமேனி வண்ணமும், அவர்தம் ஊர்தியும், கொடியும், படையும், தாரும் முதலியன பற்றிய குறிப்புக்கள் புறநானூறு, கலித்தொகை ஆகிய தொகை நூல்களில் உவமை வாயிலாக விரித்துரைக்கப்பெற்றுள்ளன. சிவனுடைய ஆற்றலாகிய உமை, கொற்றவை, திருமாலின் தேவியாகிய திருமகள், முருகன் தேவியராகிய வள்ளி, தெய்வயானை ஆகிய தெய்வங்களைப் பற்றிய குறிப்புக்களும் சங்கச் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளன.

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடல் “இன்னியல் மாண்தேர்ச்சி இசைப் பரிபாடல்” எனக் குறித்தவண்ணம் இயலிசைப் பாடல்களாகப் பாடப்பெற்று இசை வல்லோரால் பண்னமைக்கப்பெற்ற இசைத் தமிழ் இலக்கியமாகும். எழுபது பரிபாடல்களால் இயன்ற இத்தொகை நூலில் திருமாலைப் போற்றிப் பாடிய பாடல்கள் எட்டும், செவ்வேளைப் போற்றிப் பாடிய பாடல்கள் முப்பத்தொன்றும், காடு கிழாளாகிய கொற்றவையைப் போற்றிப் பாடிய பாடல் ஒன்றும் தமிழ் வையைப் புனலாடல் விழாவினைப் புனைந்து போற்றும் பாடல்கள் இருபத்தாறும், தமிழ் நிலைபெற்ற மதுரையம் பதியினைப் போற்றும் பாடல்கள் நான்கும் அமைந்திருந்தன. இச்செய்தி,

§§ ● 学 - - - -

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்யபரிபாடற் றிறம்”

எனவரும் பழைய வெண்பாவாற் புலனாகும். தெய்வத்திறம் போற்றும் தோத்திரப் பனுவலாகக் கடைச் சங்கத்தார் தொகுத்த எழுபது பரிபாடல்களில் இக்காலத்தில் முழுமையாகக் கிடைப்பன இருபத்திரண்டு முழுப் பாடல்களும், உறுப்புக்களாகக் கிடைத்த சில பாடல்களின் பகுதிகளுமே யாகும்.