பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

165


எனத் திருமால் போற்றப் பெற்றுள்ளார். நஞ்சு பொருந்திய துளைவாய்ந்த எயிற்றினையுடைய அஞ்சத்தக்க பாம்பு இறக்கும்படியாகப் புடைக்கும் சிறகுகளையுடைய கருடனைக் கொடியாகக் கொண்டோன் திருமால் என்பது இத்தொடரிற் புலப்படுத்தப்பட்டது.

திருமாலின் உந்தித் தாமரையில் படைத்தற் கடவுளாகிய நான்முகன் தோன்றினான் என்ற செய்தி,

"ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றித்

தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக வொருவற் சுட்டி’ (திருமுருகு 168-165)

எனத் திருமுருகாற்றுப்படையிலும்,

"நீனிற உருவின் நெறியோன் கொப்பூழ் நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரப்பொகுட்டிற் காண்வரத் தோன்றி”

(பெரும்பாண். 402-404)

எனப் பெரும்பாணாற்றுப்படையிலும் குறிக்கப்பெற்றது.

திருமகள் தங்கும் மார்பினை உடைய நெடியோ னாகிய திருமால் மாவலி என்னும் அவுனன்பால் குறளனாக (வாமணனாக)ச் சென்று மூவடி மண் வேண்டி ஈரடியால் மூவுலகும் அளந்த வரலாறு,

"இருநிலங் கடந்த திருமறு மார்பின்

முந்நீர் வண்ணன்” (பெரும்பாண். 29-30)

எனவும்,

“ஞால மூன்றடித் தாய” (கலி. 124)

எனவும்,

‘நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல்” (முல்லை. 1-3) எனவும் வரும் தொடர்களிற் குறிக்கப்பெற்றது.