பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'திரட்சியைக் கொண்ட அவுனரை வென்ற பொன்னாற் செய்த மாலையினை உடைய திருமால் பிறந்த ஒனமாகிய நன்னாள்’ என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். திருமாலுக்குரிய திருவோணத்திருநாளில் மதுரை மாநகரிற் போரில் பெருவிருப்புடைய வீரர்கள் பலருங் காணத் தம்மில் தாம் மாறாய்ப் பொருது நிற்கும் சேரிப்போர் மறவரது விளையாட்டாக நிகழ்ந்தது என்ற செய்தி,

“மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்

மாற துற்ற வடுப்படு நெற்றிச் சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்”

(மதுரை. 594-596)

எனவரும் மதுரைக் காஞ்சியாற் புலனாம்.

திருமாலுக்குரிய திருவோனத் திருநாளில் மதுரையிற் சேரிப் போர் நிகழ்ந்தது போலவே சிவனுக்குரிய திருவாதிரைத் திருநாளில் திருமயிலையில் வீரர்களது சேரிப்போர் நிகழ்ந்த திறத்தை,

"ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்

கூர்தரு வேல்வல்லார் கொற்றம்கொள் சேரிதன்னில் கார்தரு சோலைக் கபாலீச் சரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்”

என ஆளுடைய பிள்ளையார் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்குதற்குரியதாகும்.

"நிலந்தரு திருவின் நெடியோன் போல” (மதுரைக்.763)

எனவரும் தொடர்க்கு “எல்லாநிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ்செல்வத்தை உடைய மாயோனைப்போல; என்றது கண்ணன் எப்பொருளும் தானாய் இருக்கின்ற படியைக் காட்டி பூர் கீதை அருளிச் செய்து எல்லாரையும் போதித்தாற்போல” என நச்சினார்க்கினியர் தரும் உரையும்

விளக்கமும் இங்கு நினைக்கத் தக்கனவாகும்.