பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

171


நினைந்து போற்றத் தகுவதாகும்.

குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டு கடலாற் சூழப்பட்ட மண்ணுலகிலே வாழும் மக்கள் பலரும் ஒருங்கு கூடி உண்ணா நோன்புடையராய்த் திருவனந்தபுரத்திலுள்ள திருமால் கோயிலுள் திருவமர் மார்பனாகிய அலங்கற் செல்வன் திருவடிகளைப் பரவிப் பாடுகிடத்தலும், அன்னோர் கோயிலின் தெளிந்த மணி ஓசையினைக் கேட்டுத் தீர்த்தம் ஆடித் திருமாலை வழிபட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சி உடையராய்த் தாம் தாம் வாழும் ஊரை நோக்கி மீண்டு செல்லுதலும் சங்ககாலத்தில் நிகழ்ந்த திருமால் வழிபாட்டு நிகழ்ச்சிகளாகும். இச்செய்தி,

&%

குன்றுதலை மணந்து குழுஉக்கடலுடுத்த மன்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக் கைசுமந் தலமரும் பூசன் மாதிரத்து நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத் தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞலம் பணித்துறை மண்ணி வண்டுது பொலந்தார்த் திருளுெம ரகலத்துக் கன்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி

நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர” (பதிற்.31)

எனவரும் பதிற்றுப்பத்துப் பாடற்பகுதியில் விரித்துரைக்கப் பெற்றது. இப்பகுதியில் அலங்கற்செல்வன் என்றது திருவனந்தபுரத்துத் திருமாலை' என்பர் பழைய உரை ஆசிரியர்.

'செல்வக்கடுங்கோ வாழியாதன் ஏத்தல் சான்ற வேள்வியினைச் செய்து அறத்துறையில் சிறந்தவனாய் மாய வண்ணனாகிய திருமாலைத் தன் நெஞ்சிற்கொண்டு அத்தெய்வத்திற்கு வழிபாடு செய்தற்குரிய நெல்லின் விளைவை உடைய ஒகந்தூர்’ எனும் ஊரைத் திருவிடை யாட்டமாகக் கொடுத்துள்ளான். இச்செய்தி,

“ஏத்தல் சான்ற இடனுடைவேள்வி