பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஆக்கியபொழுதின் அறத்துறை போகி மாய வண்ணனை மனனுறப் பெற்று அவற்கு ஒத்திற நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்

மல்லலுள்ளமொடு மாசறவிளங்கிய ما همه اع ه به م = اح ماه مه ع s ۰ع که

செல்வக் கடுங்கே வாழியாதனை”

எனவரும் ஏழாம் பத்துப் பதிகத் தொடரால் விளக்கப் பெற்றது.

இசைத் தமிழ்த் தெய்வத் தோத்திரப் பனுவலாகத் தொகுக்கப்பெற்ற எழுபது பரிபாடல்களுள் இக்காலத்தில் முழுமையாகக் கிடைப்பன இருபத்திரண்டு பரிபாடல்களும், பரிபாடலுறுப்புக்களாகக் கிடைத்த சில பகுதிகளுமேயாகும். இத்தொகை நூலில் இடம்பெற்ற தத்துவ விளக்கம் பிற்காலத்தில் இராமாநுசரது விசிட்டாத்துவிதக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளமை காணலாம். தொல்காப்பியனார் காலத்தில் முல்லைநிலத் தெய்வமாக நிலவகையாற் போற்றப் பெற்ற திருமால் வழிபாடு அவர் காலத்திற்குப் பின் நிலங்கடந்த தெய்வ வழிபாடாக யாண்டும் பரவுவதாயிற்று.

"மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்” எனவரும் தொல்காப்பியத் தொடரால் காயாம் பூவினையொத்த கரிய நிறம் வாய்ந்த திருமேனியையுடைய முல்லை நிலத்தெய்வமாகப் போற்றப்பட்ட திருமால், சங்கத்தொகை நூல்களில் கரிய திருமேனியினை உடைய கண்ணபிரான் எனவும், வெளிய திருமேனியினை உடைய பலதேவன் எனவும் இரு தெய்வமாகவும் தம்முட் பிரிவின்றியியலும் ஒருமை நிலையினராகவும் இயைத்துப் போற்றப் பெற்றுள்ளார். “கல்லறை கடலுங் கானலும் போலவும்

புல்லிய சொல்லும் பொருளும் போலவும் வேறுவேறுருவின் ஒருதொழி லிருவர்த் தாங்கு நீணிலைய ஓங்கிருங் குன்றம்” (பரிபாடல் 15)

எனவரும் பரிபாடல் திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளிய