பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

175


எடுத்திட்ட கேழற்கோலத்தால் பெயர் பெற்ற வராககற்பம் எனும் இவ்வூழி, நின் அருட் செயல்களுள் ஒரு செயலின் பெயராதலை உணர்த்துதலின் அச்செயல்கள் பலவற்றையும் செய்கின்ற நின்னுடைய முதுமைக்குள்ள கற்பங்கள் யாவரானும் அறியப்படாதன. அவ்வாறு முதுமையை உடையவனாக விளங்குகின்ற நீ துவெள்ளை நிறத்தனாய பலதேவனுக்கு இளையன் என்று கூறுவார்க்குப் பிறப்பு முறையால் தம்பியாகத் திகழ்கின்றாய். எல்லாப் பொருள் களையும் மறைக்கும் இருள்போலும் உடையினை யணிந்த பனைக் கொடியோனாகிய அப்பலதேவனுக்கு வாசுதேவ மூர்த்தியாகிய நீ தமையனாகத் திகழ்கின்றாய்.

வழுவாத விரதங்களையுடைய ஞானிகள் ஆராய்ந்த வேதத்தால் தெரிந்துனரின், உயிர்தோறும் உயிர்தோறும் உயிர்க்குயிராய் (அந்தரியாமியாய்) நிலைபெற்றுள்ளாய். இந்நிலைமைகள் நின்னிடத்தே தோன்றும் தொன்மை நிலைபோல நினக்கேயமைந்த சிறப்புக்களாகும். அழகிய மதிக்கு மறுவென்னும்படி திருமகள் தங்கிய நின் மார்பம், நீரிற் கிடந்த நிலமகளை ஆதிவராக உருவின் மருப்பில் ஏந்திக் கொண்டு நீ மணந்தமையால் புள்ளியளவாகிய நிலனும் வெள்ளத்தால் வருந்திற்றில்லையென்று வேதப் பொருளையுட் கொண்டு கூறுவோர் கூற்றோடு மாறுபடு கின்றது. ஒருத்தியொடுமணம் புனரும் வழி பிறள் ஒருத்தியின் மார்பினைச்சேர்தல் கூடாமையின் உரையொடு பொருந்திற்றில்லை என்றார்.

நின்னை எதிர்த்த அவுனர் கொடிகள் அற்று இற்று, செவி செவிடுபட்டு, முடிகள் அதிர, உலகுகள் நிலைதளர மிக்கு முழங்கும் நின்கையிற் சங்கம் இடியினை யொப்ப தாகும். நீ ஏந்திய ஆழிப்படை, நீண்ட கரிய பனைமரத்தில் பல பதினாயிரம் குலைகள் அதன் தலையினிங்கித் தரைக்கண் விழுவன போல அவுனர் தலைகள் உடல்மிசை நில்லாமல் கொத்தாக வீழ்ந்து சிதறி நிலத்தின்கண் சேர்ந்து புரளும்படி அவுனர்களின் உயிரைச் செகுக்கும். அவ்வாழிப் படையின் உடல் கூற்றுவனை ஒக்கும்; அதன் நிறம் சுடுகின்ற பொன்னோடு எழுந்து விளங்குகின்ற தீயின் நுடக்கத்தை