பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

179


காக்கும் காத்தற் றொழிலையுடையாய், புருட தத்துவம் ஒன்றும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், ஆகாயத்தின் பண்பாகிய ஓசையும், காற்றின் பண்பாகிய ஊறும், தீயின் பண்பாகிய உருவும், நீரின் பண்பாகிய சுவையும், நிலத்தின் பண்பாகிய நாற்றமும், செவி, தோல், கண், நாக்கு, மூக்கு எனும் ஐம்பொறிகளும், மனமும் அகங்காரமும், மானும், மூலப்பகுதியும் என இருபத்தைந்து தத்துவங்களாலும் ஆராயப்படும் பெருமையை யுடையாய், வாசுதேவன், சங்கருடனன், காமன், பிரத்யும் நன், அநிருத்தன் என நால்வகை வியூகங்களிலும் மேற் கூறியவாறு கூறப்படும் சிறப்பினை யுடையாய். ஆய்ச்சியரொடு கூடிக் குரவைக் கூத்தாடும்போது அவர்க்கு இடமும், வலமும் ஆகத் திகழ்வோய். கூத்தாடுதற்கெடுத்த குடத்தினையும், பகைவரைக் கொல்லுதற்கெடுத்த அலப்படையினையு முடையாய். அழகிய நீல மணியும், கருங்கடலும், கார் மேகமும் ஆகிய இவற்றையொக்கும் கரிய திருமேனியொடு நிறத்தால் மாறுபடும் பொன்னாடையினைப் புனைந்தாய். பகைவர் உயிரொடு முரண்பட்ட சக்கரப் படையினை யுடையாய். வெகுளியாலன்றி இயல்பாகவே சிவந்த கண்ணினையுடையாய். யாவராலும் அறியப்படாத இயல்பினை உடையாய். எனினும், நின் அன்பரது இடைவிடாத நினைவின்கண் நீக்கமின்றி உள்ளாய், நிறைந்த வெள்ளத்து நடுவு மாநிலம் தோற்றாத முதற்காலத்துப் பிரமனைக் கொண்டு உந்திக்கண் மலர்ந்த பொகுட்டுத் தாமரையினை உடைய நின் ஆழிப் படையே உலகிற்கு நிழல் தருவது என மூன்றாம் பரிபாடலால் கடுவனிள வெயினனார் திருமாலைப் பரவிப் போற்றுகிறார்.

“நின்பால் அன்பு செலுத்திய பிருகலாதன் வருந்தாமல் அவன் நெஞ்சிற் பொருந்தி, இரணியனது மார் பின் பகைவலிகெடத் துணினின்றும் நீ புறப்பட்டு அவனுடைய மார்பினைப் பிளந்த நகத்தினையுடையாய். பூமியானது வெள்ளத்திலழுந்தியபோது வராகமாகி அதனைக் கழுத்தால் தாங்கி வெள்ளத்தினின்றும் எடுத்த நினது செயல் மேருவின் தொழிலையொக்கும். நினது வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின் கண்ணே காணப்படாநின்றன. தண்மையும்