பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மென்மையும் திங்களிடத்தே உள்ளன. கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளர்தலும் கொடையும் மழையின் கண்னேயுள்ளன. மன்னுயிர்களைத் தாங்குதலும் அவை செய்த பிழைகளைப் பொறுத்தலுமாகிய நின் தன்மைகள் நிலத்திடத்தே அமைந்தன. நின் மணமும், ஒளியும், காயாம் பூவிடத்தே யமைந்தன. நீ வெளிப்படுதலும் நினது பெருமையும் நீரின் கன்னே காணப்படுகின்றன. ஞானக்கண்ணாற் காணப்படும் நின துருவமும், ஒலியும் ஆகாயத்துள்ளன. நீ அவதரித்தலும் மீண்டுசென் றடங்குதலும் காற்றினிடத்தேயுள்ளன. இவ்வாறு நின்னிடத்திலிருந்து பிரிந்து நின்னால் பாதுகாக்கப் பட்டனவெல்லாம் பின்னும் நின்னொடு பொருந்துதல் அமைந்தன. செவி முதலிய பொறிகள் ஐந்தினையும் அவற்றின் செயல்களையும் மயக்கமற நீக்கி மைத்திரி, கருனை, முதிதை, மகிழ்ச்சி எனும் நான்கினாலும் மனமாசு கழுவி, நொசிப்பு என்னும் சமாதி நிலையிலே தம்மை நிறுத்திய நின் அன்பர்கள் நின் புகழ்த்திறங்களையெல்லாம் விரித்துப் போற்றினர். அப்புகழ்களெல்லாம் நினக்கு இயல்பாவன அல்லது வியக்கப்படுவன அல்ல. அவற்றுட் சிலவற்றை இங்குமங்குமாக நாங்கள் மாறுபடக் கூறும் எமது அறியாமை கண்டு நீ நகைத்தலுமியல்பே. கருடச் சேவற் கொடியினையுடைய நின் உயர்கொடிகளுள் ஒன்று பனை, மற்றொன்று கலப்பை, பிறிதொன்று யானை. இவ்வாறு நினக்குப் பல கொடிகள் உளவேனும் தினது ஒருதலையாக உயர்ந்த கொடியாகிய கருடக் கொடியினை அக்கொடிகள் ஒத்தலில்லை. நஞ்சுடைய பாம்பின் விடத்தையும், உடலையும், உயிரையும் உண்ணும் கருடனாகிய அவனது வயிற்றின்மேல் உதரபந்தனமாகச் சுற்றிக் கொண்டிருப்பது பாம்பு. அப்பாம்பே அவனுக்குக் கைவளை முடிமேல் அணியும் கண்ணிகளும் பாம்பே. கழுத்திற் பூணும் பூணாகவும், தலைமேலணியும் சூட்டாகவும் அமைந்தன பாம்புகளே. பாம்புகளே அவன் சிறகுகளிடத்தனவுமாகும். கொடி மேலுள்ள அக்கருடன் எறிந்தெடுக்கும் இரையாக அமைந்தனவும் பாம்புகளே.