பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



10

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு



அரப்பாவிற் கிடைத்துள்ள ஆண்சிலையொன்று இடது காலைத்துக்கி வலது காலையூன்றி நின்று நடம்புரியும் நிலையிற் காணப்படுகின்றது. இதனைச் சிவபெருமானுக் குரிய திருவுருவங்களில் ஒன்றான நடராசர் திருவுருவின் முதலுருவமாகக் கருதுவர் ஆராய்ச்சியாளர்.

மொகஞ்சதரோவிற் கிடைத்துள்ள பெண் வடிவங்களுள் குழந்தையை அனைத்தவண்ணம் உள்ள வடிவங்களும், அமைதியும் அருளும் பொலியும் நிலையில் அமைந்த அன்னை வடிவங்களும், காண்போர் அஞ்சத்தக்க முகத்தோற்றமுடைய பெண் வடிவங்களும் காணப்படு கின்றன. இவை முறையே பெண் தெய்வத்திற்குரிய ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் முத்தொழில்புரியும் சத்தியின் நிலையைக் குறிப்பன எனவும் பிற்காலத்தில் இந்து சமயத்தின் திராவிடக்கூறாக விளங்கும் சத்தி வழிபாட்டின் மூலக் கருவாகச் சிந்து வெளியின் தாய்த் தெய்வ வழிபாடு விளங்குகின்றதெனவும் மோனியர் வில்லியம் என்ற அறிஞர் கூறுவர்.

சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பெற்றுள்ள சில பொருள்களிற் காணப்படும் எழுத்துக்குறிகள் தமிழ் அமைப்புடையனவாகவுள்ளனவெனவும் அவை மழை மூன்(று) கண், நண்டுர், வேலூர், குரங்கர், மீனவர் முதலிய சொற்களைக் குறிக்கின்றன எனவும், பேரான்(ள்) எண்னாள், மூன்(று) கண் என்பன சிவனைக் குறிக்கின்றன எனவும் கருதுவர் உறீராஸ்பாதிரியார்.

மொகஞ்சதரோவிற் கிடைத்துள்ள சுண்ணாம்புக்கல் முத்திரையொன்றில் யோகியின் உருவத்தின் இருமருங்கிலும் நாகர் இருவர் மண்டியிட்டு வணங்கும் உருவம் பொறிக்கப் பட்டிருத்தலால் மிகப்பழங்காலத்தில் சிவ வழிபாடு நாக வழிபாட்டுடன் தொடர்புடையதாய் உருவாகியதென்பது உய்த்துணரப்படும் என்பர் ஆராய்ச்சியாளர்.

சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களாக முதற் கண் தாய்த்தெய்வத்தையும் அடுத்தபடியாக மும் முகமுடைய கடவுளையும்