பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நிறத்தோடு மாறுகொள்ளும் பக்கமாலைகளையும் கருடப் புள்ளினை எழுதிய கொடியினையும் விண்ணின்கண் தோன்றும் நிறைமதியினது குளிர்ச்சியினையும் உடையனாய், அளித்தற்றொழிலை மேற்கொண்ட தெய்வம் திருமால் எனவும், கார்ப்பருவ மேகத்தின் இரண்டு பக்கங்களிலும் ஞாயிறும், திங்களுமாகிய இரு சுடர்கள் விளங்கித் தோன்றுமாறு போன்று விளங்கும் ஆழியையும் சங்கினையும் ஏந்திய கைகளையுடையவன் அம்முதல்வன் எனவும், சுவை முதலிய ஐம்புலன்களாகவும் அவற்றை நுகரும் பொறிகளாகவும் அவற்றாலுணரப்படும் தன்மையினை யுடைய பூதங்களாகவும் விளங்குவோன் அவ்விறைவன் எனவும் மூலப்பகுதியும் அறனும், அநாதியான் காலமும், ஆகாயமும், காற்றொடு பொருந்திய தீயும் கூடிய இம்மூவேழுலகத்து உயிர்களெல்லாம் அம்முதல்வனிடத்தே உளவாயின எனவும், உயிர்களின் பொருட்டுப் பாற்கடல் நடுவே ஆயிரம் தலைகளையுடைய பாம்பனையின்கன் அறிதுயிலமர்ந்தருளிய துளவஞ்சூடிய திருமால் தானும் மிக்க ஒலியினையுடைய மறமிக்க பகைவரைக் கொல்லும் படையுடனே பகைவருயிரையகற்றும் விறல்மிகு வலியும், ஒளியும் பொருந்தி அவர் மார்பினை உழும் நாஞ்சிற்படை யுடையோனாகிய பலதேவனும் பூமியினது நடுக்கமற அதனை எடுத்து நிறுத்தற்குரிய கொம்பினையுடைய ஆதிவராகம் எனும் பன்றியும் என மூன்று திருவுருவங்களாகப் பிரிந்த ஒரு தெய்வம்” எனவும் பதின்மூன்றாம் பரிபாடலில் நல்லெழினியார் திருமாலின் இயல்புகளை வகுத்துரைக்கின்றார்.

அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து நிலவெல்லையைத் தாங்கிய தம் நிலை கெடாத சக்கரவாள மலை முதலாகப் பண்டைப் புலவர் ஆராய்ந் துரைத்த நெடிய குன்றங்கள் பலவற்றுள்ளும் நிலத்தில் வாழும் மக்களின் பசி வெம்மையை நீக்கி நிறைபயன்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் மக்கள் பெற்று மகிழப் பயன்தரும் குன்றங்கள் சிலவே. அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்த்தடங்களும் மழை தவழும் சிகரங்களும் உடையனவாகிய குலமலைகள் சில