பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

185


அமுதத்தினை விரும்பித் தேவரும், அவுனரும் கடலைக் கடைந்த காலத்தில் ஆழிப்படையினையுடைய திருமால் மந்தரமலையாகிய மத்தொடு பிணித்து இருமருங்கும் பற்றியிழுத்தற்குரிய கடை கயிறாக அமைந்தவரும் ஆதிசேடனாகிய இவரே. இங்ங்ணம் திருமால் ஒரு தோழங்காலம் கயிறாகக் கொண்டு இருமருங்கும் இழுத்துக் கடைந்த நிலையிலும் அறாத வன்மை யுடையவரும் இவரே. மலைகள் நிறைந்த நிலவுலகினைத் தம் தலையின் அணிகலன்போற் சுமந்தாரும் இவரே. ஏற்றுர்தி யானாகிய சிவபெருமான் அவுனர்க்குரிய மூவெயில்களை பழித்த காலத்தில் மேருமலையாகிய வில்லுக்குரிய நானாக இருந்து தொன்றுதொட்டு நிலைபெற்று வரும் புகழைத் தந்தவரும் ஆதிசேடனாகிய இவரே. பகைவரை வருத்துதலையுடைய ஆயிரத்தலைகளை விரித்துள்ள தேவகனங்களைச் சுற்றமாகக் கொண்ட அண்ணலாகிய ஆதிசேடனை வணங்கி விளக்கமுடையோமாய் நின்னைப் பிரியாதிருத்தல் வேண்டும் என இருந்தையூரமர்ந்த செல்வனாகிய நின் திருவடியை வனங்கிட் பரவுகின்றோம் எனப் போற்றும் முறையில் அமைந்தது, தொல்காப்பியம் செய்யுளியல் 21ஆம் சூத்திரவுரையிற் பேராசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டிய பரிபாடலாகும்.

இதனால் மதுரையையடுத்துள்ள இருந்தையூரில் அமைந்த திருமால் கோயிலில் பூமுடிநாகராகிய ஆதி சேடனுக்கும் கோயில் அமைந்திருந்ததென்பதும் அங்குத் திருமாலை வழிபட வந்த மக்கள் அம்முதல்வனுக்கு அணையாய் அமைந்த பூமுடிநாகராகிய ஆதிசேடனையும் புகை, பூ, அவி என்பன கொண்டு வழிபட்டார்கள் என்பதும் பூமுடிநாகர் திருமால் கடல் கடைந்தபொழுது மந்தரமலை யாகிய மத்தோடு பினைத்த கடைகயிறாகவும், சிவன் திரிபுரமெரித்தபொழுது மேருமலையாகிய வில்லிற் பூட்டிய நானாகவும் இருந்து துணைபுரிந்தமையால் பாம்பு வழிபாடு சிவன், திருமால் என்னும் இருபெருந்தெய்வ வழிபாடு களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கொள்ளப்பெற்ற தென்பதும் நன்கு துணியப்படும்.