பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருமாலின் உந்தித் தாமரையிலிருந்து தோன்றி உலகினைப் படைக்கும் படைப்புக் கடவுளாகிய நான்முகனும், உயிர்களின் உள்ளத்தே ஆணும் பெண்ணு மாய்க் கூடி வாழும் காமவுணர்வினைத் தூண்டும் தெய்வமாய காமனும் ஆகிய இருவரும் திருமாலின் புதல்வர் களாகப் போற்றப் பெறுகின்றனர். இச்செய்தி,

"இருவர் தாதை இலங்குபூண் மாஅல் (பரி. 128)

எனவரும் பரிபாடல் தொடரால் இனிது புலனாகும்.

தொல்காப்பியனார் காலத்து மாயோன் என ஒன்றாகக் குறிக்கப்பெற்ற தெய்வம், கடைச்சங்க காலத்தில் கண்ணன், பலதேவன் என்னும் இரு திருவுருவங்களில் வைத்து ஒரு பெரும் தெய்வமாக வழிபடப்பெற்ற செய்தி முன்னர்க் குறிக்கப்பெற்றது.

வேத முதல்வன், தீதற விளங்கிய திகிரியோன், நாவலந்தனரருமறைப் பொருள், மனத்தாலும், நூல்களாலும் அறியப்பெறாதவன், ஐம்பெரும் பூதங்களும், ஞாயிறு திங்கள் முதலிய கோள்களும் தேவர் அசுரர் முதலியோரும் மூவேழுலகவுயிர்களும் மாயோனாகிய முதல்வனிடத்தே தோன்றி, அவனிடத்தே யொடுங்குகின்றன எனவும் எல்லாப் பொருள்களினுள்ளும் அவன் உயிர்க்குயிராயுள்ளான் எனவும், படைத்தற் கடவுளாகிய நான்முகனைத் தன்னுந்திக் கமலத்துத் தோற்றுவித்தவன் எனவும் காமனும், சாமனும் அவன் புதல்வர்கள் எனவும் பரிபாடல் திருமாலைப் போற்றிப் பரவுகின்றது.

ஆயிரந்தலையுடைய ஆதிசேடனை வாயிற் கெளவிக் கொண்டும், பாம்புகளை அணிகலனாக அணிந்து கொண்டும் உள்ள கருடனைத் தனக்கு ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்ட தெய்வம் திருமால். அவனது இயல்பினையறிதல் மயக்கம் நீங்கிய ஞானியர்க்கும் அரிது. அவ்வாறாகவும் அவன் இன்ன தன்மையன் என்று கூறுதல் ஏனையோர்க்கு எங்ங்னம் எளிதாகும்? இங்ங்ணம் இறைவன் அறிதற்கரியனாயினும் அவனையறிதல் வேண்டுமென்ற ஆர்வம் மக்களுள்ளத்தே