பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இசையமைக்கப்பெற்றது 15ஆம் பரிபாடலாகும். இதற்குரிய பண்ணும் சுவடிகளில் பண் நோதிறம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

“செய்யோள் சேர்ந்த நின்மாசில் அகலம்’ (பரி. 2:31)

"திருவரையகலம் தொழுவோர்க்கு

உரிதமர் துறக்கமும் உரிமைநன்குடைத்து”

(பரி. 13:12,13)

எனவரும் பரிபாடற் றொடர்கள், திருமாலின் தேவியாகிய திருமகளது அருள் பெற்றே திருமாலை அடைதல் வேண்டும் என்னும் வைணவ நெறிமுறையினைப் புலப்படுத்தும் குறிப்புடையவாதல் நுணுகி நோக்கத்தக்கது.

திருமால் பாம்பனையில் பள்ளி கொண்டருளுதல் பற்றிச் சார்த்து வகையால் ஆதிசேடன் வழிபாடும் திருமால் வழிபாட்டோடும் பரிபாடலில் இனைத்துரைக்கப் பெற்றுள்ளது. மதுரையை அடுத்துள்ள குள வாய் அமைந்தான் நகரில் பூமுடிநாகராகிய ஆதிசேடனுக்காகத் தனிக்கோயில் அமைந்துள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. பாம்பு வழிபாடு பாரத நாட்டின் பலபகுதிகளிலும் நெடுங்காலமாக நிலைபெற்று வருவதாகும். சிவபெருமான் பாம்புகளை அணிகலனாக அணிந்து கொண்டமையும், திருமால் பாம்பணையில் பள்ளிகொண்டருளினமையும் நாகவழிபாட்டின் தொன்மையினையும் அவ்வழிபாடு சிவன் வழிபாட்டோடும், திருமால் வழிபாட்டோடும் சார்புடைய தாய் இணைந்து தொடர்ந்து வருதலையும் புலப்படுத்தல் Errassfgorrib.

பால்போலும் மதியை (இராகு என்னும்) பாம்பு மறைத்ததாக, நீனிறவண்ணனாகிய திருமால் அம் மறைப்பினை நீக்கி மதியை விடுவித்த செய்தி, பான்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீனிற வண்ணனும் போன்ம்' எனவரும் முல்லைக்கலித் தொடரிற் குறிக்கப் பெற்றது. யாவராலும் பெறுதற்கரிய பெரும் பொருளாகிய முறையையுடைய திருமால், அன்பர் பாடும் இசைப்