பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'எறியா வாளும் எற்ற மழுவும் செறியக் கட்டியீரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாஅய்ப்புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய ஆனேற்றவிர்பூண்”

எனவரும் கலித்தொகைத் தொடரால் அறியப்படும். "பூனப்பட்டவை வெட்டாத வாளும், வெட்டாத மழுவும் நெருங்கக் கட்டி இரண்டு புறத்திலும், தங்கின மழை பெய்த புலத்து ஈயல் மூதாயினது (பட்டுப்பூச்சி, இந்திரகோபப் பூச்சி) புகரையுடைத்தாய நிறத்தையுடைய அழுக்கறவிளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண்” என்பது மேற்குறித்த தொடரின் பொருள்.

திருமாலும் சிவபெருமானுமாகிய இருபெருந் தெய்வங்கட்குரிய வாளும், மழுவுமாகிய இருபடைகளையும் அவற்றுடன் சிவபெருமானது ஊர்தியாகிய இடபத்தினையும் பொன்னாலும், பவளத்தாலும் செய்து அமைத்த பூனினை வளருங் குழந்தைகட்கு அணிகலனாக அணியும் பழக்கம் சங்ககாலத்தில் நிலவியிருந்தமை மேற்குறித்த கலித்தொகைத் தொடராற் புலனாகும். இவ்வழக்கத்தினை அடியொற்றி யமைந்ததே காத்தற் கடவுளாகிய திருமாலுக்குரிய ஐம்படைகளைக் குழந்தைகட்கு ஐம்படைத்தாலியாக அணியும் வழக்கமெனக் கருத வேண்டியுள்ளது.

முல்லை நிலமக்களாகிய கோவலர்களால் ஏறு தழுவுதற்பொருட்டுச் செலுத்தப்பட்ட காளைகளின் நிறங்களைக் குறித்து,

"வானுற வோங்கிய வயங்கொளிர்பனைக் கொடிப் பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும் பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ் நேமித் திருமறு மார்பன்போற் றிறல்சான்ற காரியும் . . . . .”

(கலி, 104) எனவும்,

"வள்ளருள் நேமியான் வாய்வைத்த வளை போலத்

தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியும்