பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உருமுறழ் முரசிற் றென்னவற் கொருமொழி கொள்க விவ்வுலகுடனெனவே”

(கலி. 104) எனவும்,

“பாடிமிழ் பரப்பகத் தரவணை, யசைஇய

ஆடுகொள் நேமியாற் பரவுதும் நாடுகொண் டின்னிசை முரசிற் பொருப்பன் மன்னி அமைவர லருவி யார்க்கும் இமையத்தும்பரும் விளங்குக வெனவே” (கலி.105) எனவும்,

அருந்தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச் சுரும்பிமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் ஏற்றவர் புலங்கெடத் திறை கொண்டு மாற்றாரைக் கடக்க வெம்மறங்கெழு கோவே'

(கலி. 106) எனவும்,

தம் வழிபடு தெய்வம் புறங்காப்பதாம் எனவும் நாடாள் வேந்தனாகிய பாண்டியன் வெற்றியும் புகழும் உடையனாய் நீடு வாழ்தல் வேண்டும் எனவும் வாழ்த்துதலால் இனிது விளங்கும்.

ஆயர்மகளிர் தொழுநையாற்றில் நீராடுங்கால் தம்முடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு நீராடினர். அந்நிலையில் அங்கு வந்த கண்ணபிரான் விளையாட்டாக அவர்தம் உடைகளைக் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தில் ஏறியமர்ந்தான். அப்பொழுது அங்குப் பலதேவன் வரக் கண்டு அவ்வாயர் மகளிர் தம் நானினைக் காக்கவியலாது பெரிதும் வருந்தினர். அந்நிலையில் அம்மகளிர் பொருட்டுக் குருந்த மரக்கிளைகளின் தழைகளைத் தாழ்த்திக் கொடுத்து அம்மகளிர் தழை யுடையில் தம் அற்றமறைத்துத் தம் உயிரினும் சிறந்த நானினைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு செய்தருளினன் என்பது கண்ணன் விளையாடல் பற்றிய செய்தியாகும். இது,