பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கொள்ளும்படித் தான் அனிந்த அணிகலன்களைக் கழற்றி விமானம் செல்லும் வழியே நிலத்திற்போட்டுச் சென்றாள் எனவும், அவ்வணிகலன்களைக் கண்டெடுத்த கிட்கிந்தையி லுள்ள குரங்குகள் அவ்வணிகலன்களை அணியும் முறைமை யறியாது கண்டோர் நகைக்கும்படி மாறி அணிந்து கொண்டன என்ற செய்தி,

“கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை யரக்கன் வவ்விய ஞான்றை நிலஞ்சேர் மதரணிக் கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு அராஅ அருநகை இனிது பெற்றிகுமே" (புறம் 378)

எனவரும் புறப்பாடலில் குறிக்கப்பெற்றுள்ளமை காண்க.

"கருவளர் வானத் திசையிற் றோன்றி

உருவறி வாரா வொன்ற னுழியும் உந்துவளி கிளர்ந்த ஆழு மூழியும் செந்திச் சுடரிய ஆழியும் பணியொடு தண்பெய றலைஇய ஆழியு மனைவயிற் றுண்முறை வெள்ள மூழ்கியார்தருபு மீண்டும் பீடுயர் பீண்டியவற்றிற்கும் உள்ளி டாகிய விருநிலத் துழியும்” (பரி. 2:5-12)

எனவரும் பரிபாடற்றொடர் உலகின் தோற்றவொடுக்கம் உரைப்பதாய் ஐம்பெரும் பூதங்களின் தோற்ற வொடுக்கத் தையும் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இத் தொடரில் வானத்து உருவறிவாரா ஒன்றனூழி, உந்துவளி கிளர்ந்த ஊழுழுழி, செந்திச் சுடரியவூழி, தண்பெயல் தலைஇயலுழி, மீண்டும் வெள்ளம் மூழ்கி உள்ளீடாகிய இருநிலத்துழி, கேழல் திகழ்வரக்கோலமொடு பெயரியவூழி என ஏழுழிகள் குறிக்கப்பெற்றன. ஊழிகள் ஏழு வகையின என்னும் இக்குறிப்பு,

"ஊழியேழான ஒருவா போற்றி”

எனவும்,