பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

197


‘ஏழு கொலாமவர் ஊழி படைத்தன”

எனவும் வரும் திருநாவுக்கரசர் தேவாரத்திலும் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

‘பரம்பொருளினின்றும் ஆகாயம் தோன்றி, அதனின்றும் காற்றுத் தோன்றி, அதனின்றும் தீத் தோன்றி, அதனின்றும் நீர்தோன்றி, அதனின்றும் நிலம் தோன்றிற்று என்று வேதத்துள்ளும் கூறப்பட்டது” என இத்தொடருக்கு வேதநெறிபற்றிப் பரிமேலழகர்.தரும் விளக்கம் சங்ககாலத்தில் வாழ்ந்த திருமால் நெறியினர் பின்பற்றிய தத்துவக் கொள்கையினை ஒருவாறு புலப்படுத்தல் காணலாம். வைணவ சமயத்தினர் உலகு, உயிர், கடவுள் என்னும் முப்பொருள்களை முறையே சகசிவபரம் எனப் பகுத்துணரும் நிலையில் பல்பொருட் கொள்கையினராகக் காணப்படு கின்றனர். எனினும், அம்மூன்றனுள் உலகு, உயிர்களை முறையே பரம்பொருளுக்கு உடமையாகவும், அடிமையாக வும் அடக்கிய நிலையில் முடிந்த முடிபாகப் பரம்பொருள் ஒன்றே பொருள் என்னும் ஒருபொருட் கொள்கையினை உடன்படும் நிலையிலும் அவர்தம் தோத்திரப் பனுவல்கள் அமைந்துள்ளன. இறைவன் உலகுயிர்கட்கு நிமித்த காரனனாதலேயன்றி முதற்காரணமாகவும் உள்ளான் என்பது வைணவர் தத்துவக் கொள்கையாகும்.

மன்னுயிர்களும், உலகமும் மாயோ னாகிய பரம்பொருளிடத்தே தோன்றி அவனிடத்திலேயே ஒடுங்குவன என்னும் இக்கொள்கை,

"தீவளி விசும்பு நிலனி ரைந்து

ஞாயிறுந் திங்களு மறனு ങ്ങഥലു திதியின் சிறாரும் விதியின் மக்களும் மாசிலெண்மரும் பதினொரு கபிலரும் தாமா விருவருந்தருமனு மடங்கலும் மூவே ழுலகமு முலகினுண் மன்பதும் மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்