பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மாயா வாய்மொழி யுரைதர வலந்து” (பரி. 3 : 4 - 11)

எனவரும் பரிபாடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

நித்தியமாகிய வேதம் தேவரும், மூவகை உலகுகளும், உயிர்ப் பன்மையும் நின்கட் டோன்றியவாறு அறிந்து கூறும். சிற்றறிவினேமாகிய யாம் அவற்றுட் சிலவற்றை முறை பிறழக் கூறுவதல்லது அவ்வாறு எல்லாம் கூறுதற்கு உரியம் அல்லம் என்பார், வலந்துரைத்தேம் என்றார் என இத்தொடரின் கருத்தினைப் புலப்படுத்துவர் பரிமேலழகர். எனவே சடமும், சித்துமாகிய எல்லாம் வாசுதேவன் பரிணாமமே ஆம் என்னும் பாஞ்சராத்திரர் கொள்கைக்கு மூலமாக விளங்குவது மேற்காட்டிய பரிபாடல் பகுதி என்பது நன்கு புலனாம்.

சாங்கியர் கூறுமாறு தத்துவங்கள் இருபத்தைந்தெனக் கொள்ளுங் கொள்கை சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளது

“பாழெனக் காலெனப்பாகென வொன்றென

இரண்டென மூன்றென நான்கென வைந்தென ஆறென வேழென வெட்டெனத் தொண்டென, நால்வகை பூழியெண் ணவிற்றும் சிறப்பினை (பரி. 3)

எனவரும் தொடரில் பாழ் என்றது புருடனை. புருடத்துவம் பிறிதொரு தத்துவம் பிறத்தற்கிடனாகாது என்பது சாங்கியர் கொள்கை. அவர் மதம் பற்றிப் புருட தத்துவம் பாழ் எனப் பெயர் பெற்றது. கால் என்றது ஆகாயம் முதற் பூதங்கள் ஐந்தினையும். இவை தாம் பிறவற்றினின்றும் தோன்றுத லானும், தம்மிடத்திலிருந்து பிற தோன்றுதற் கிடனாத லானும் கால் எனப் பெயர் பெற்றன. காலுதல் ஒன்றினின்று வெளிப்படுதல் அன்றி, தன்னிலிருந்து ஒன்றை வெளிப் படுத்துதல் என்ற இவ்விருபொருளில் ஈண்டு வழங்கப் பெற்றது.

பாகு என்றது சொல்லல், இயங்கல், கொடுத்தல், விடுத்தல், இன்புறுதல் என்னும் தொழிலால் பாகுபாடுடைய வாக்கு கால், கை, எருவாய், கருவாய் ஆகிய தொழிற் கருவி