பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

199


(கன்மேந்திரியம்) ஐந்தனையும் குறித்தபெயர்.

“ஒன்று என்றது ஆகாயத்தின் பண்பாகிய ஒசையினை எல்லாப் பண்பிற்கும் முற்றோன்றுத லால் ஒன்றெனப் பட்டது என்பர் பரிமேலழகர், இரண்டு என்றது காற்றின் சிறப்புப் பண்பாகிய ஊறு. மூன்று என்றது தீயின் சிறப்புப் பண்பாகிய ஒளியினை. நான்கு என்றது நிலத்தின் சிறப்புப் பண்பாகிய சுவையினை. ஐந்து என்றது நிலத்தின் சிறப்புப் பண்பாகிய நாற்றத்தினை. ஆறு என்பன செவி, மெய், கண், நா, மூக்கு என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும். ஏழு என்றது அகங்காரம். எட்டு என்றது மான். அஃதாவது புத்தி. தொண்டு என்றது மூலப் பகுதி. நால்வகை யுகங்களிலும் இவ்வெண்களால் நவிலப்படும் சிறப்பினையுடையாய்”

என இவ்வாசிரியர் திருமாலைப் பரவியதன் கருத்து, பூதங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் புலன்கள் ஐந்தும், மனம் முதலிய அந்தக்கரணங்கள் மூன்றும் மூலப்பகுதியும் எனக் கூறப்பட்ட தத்துவங்கள் இருபத்தைந்தினாலும் எக்காலத்தும் ஆராயப்படும் பெருமையையுடையோன் திருமால். என்றவாறு, ஈண்டுத் தொண்டு எனப்பட்ட மூலப்பகுதி என்றும் நிலையுடையதாய், எல்லாவற்றையும் அடக்கும் விரிவுடைய தாய், அறிவிலதாய், எல்லாப் பொருட்கும் காரணமாய், சத்துவம் இராசதம் தாமதம் என்னும் முக்குனங்களும் ஒப்ப நின்ற நிலையினதாய் அருவாய் உள்ளதாகும். இஃது இருபத்து நாலாம் தத்துவம். இதன்கண் தோன்றும் காரியம் புத்தி (மான்) முதல் நிலம் ஈறாக இருபத்து மூன்று தத்துவங்களாகும். இங்குக் கூறப்பட்ட தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய், நிலையேறும் விரிவும் உடையதாய், அருவாய், பலவாய், அறிவதும் செய்வதுமின்றி வெறும் அறிவு மாத்திரமாய் ஒன்றற்குக் காரணமாதலும் காரியமாதலுமின்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத்தைந்தாம் தத்துவம் எனப்படும். இவ்விருபத்தைந்தாம் தத்துவமாகிய புருடன் வீட்டு