பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நிலையிலும், கட்டு நிலையிலும் ஒரு தன்மையனேயாம். புருடனுக்கு மலினம் என்பது இல்லை. தாமரை இலை நீர் போல் ஒட்டற்று நிற்பன். தோற்றமில் காலமாகப் புத்தியைச் சார்ந்த அவிச்சைவயத்தால் பாசங்களாற் பிணிப்புடையோன் எனப்பட்டு இவன்பால் இன்பதுன்ப உணர்வு தோன்றா நின்றது. புத்தி என்றது மூலப்பகுதியின் பரிணாமம் (திரிபு). அதுவே மான் என்றும் கூறப்படும். புத்தியாகிய அது பொறிவாயிலாக ஞானமாய்ப் பரிணமித்து உலகப் பொருள்களிற் செல்லும் புருடன் ஒன்றைச் செய்வான் என்பதும் புத்தி ஒன்றை அறியும் என்பதும் இவற்றிடையே உள்ள வேற்றுமை உணராமையால் கூறப்படும் கூற்றாகும். அறிவில் பொருளாகிய மூலப்பகுதியையும் அறிவுடைய புருடனையும் பகுத்து உணரவே அவிச்சை நீங்கும். அதுவே முத்தியாகும் என்பர் சாங்கியர்.

சாங்கியர் கூறும் இருபத்து நாலாம் தத்துவமாகிய குனதத்துவத்தின்மேல் இருபத்தைந்தாம் தத்துவம் வாசுதேவன் என்று ஒருவன் உளன். அவனே பரம்பொருள். அவனிடத்தினின்றும் கண்ணனும், அநிருத்தனும், மகரத்துவசனும் இரெள கினேயனும் என நால்வர் உலகங்களைப் படைத்தற்கெனத் தோன்றினர். இந்த நால்வகை வியூகங்களால் சடமும் சித்தும் ஆகிய எல்லா உலகமும் படைக்கப்பட்டன. ஆதலால் எல்லாப் பொருள் களும் வாசுதேவனது பரிணாமமே ஆம். ஆதலால் பரம் பொருளாகிய வாசுதேவனை வழிபட்டு வாசுதேவன் உருவில் இலயமாதலே முத்தி என்பதாம் என்பது வைணவ சமயத் தாருள் ஒருபகுதியாகிய பாஞ்சாரத்திரர் கொள்கையாகும்.

“சுவையொளி யூறோசைநாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு” (குறள். 27)

எனவரும் திருக்குறளுக்கு, “சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும் ஆராய்வான் அறிவின்கண்ணதே

உலகம்” என உரைவரைந்த பரிமேலழகர்,

“அவற்றின் கூறுபாடாவன பூதங்கட்கு முதலாகிய