பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

201


அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப் பூதங்கள் ஐந்தும், அவற்றின் பூதங்களின் கூறாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதுமாம். வகை தெரிவான்கட்டு என உடம்பொடு புணர்த்ததனால், தெரி கின்ற புருடனும் அவன் தெரிதற்கருவியாகிய மான் அகங்கார மனங்களும் அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதலாவது மூலப்பகுதி ஒன்றிற்றோன்றியது அன்மையின் பகுதியே யாவதல்லது விகுதியாகாதெனவும், அதன் கண் (மூலப்பகுதி யின்கண்) தோன்றியமானும், அதன்கண் (மானின்கண்) தோன்றிய அகங்காரமும், அதன்கண் அகங்காரத்தின்கண்) தோன்றிய தன்மாத்திரைகளும் ஆகிய ஏழும் தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கட்டோன்று வனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடையவெனவும், அவற்றின்கண் (தன்மாத்திரையின்கண்) தோன்றிய மனமும் ஞானேந்திரியங் களும் கன்மேந்திரியங்களும் பூதங்களுமாகிய பதினாறும் தங்கட் டோன்றுவன வின்மையின் விகுதியேயாவ தல்லது பகுதியாகாவெனவும், புருடன் தானொன்றிற் றோன்றாமை யானும் தன்கட் டோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும் சாங்கிய நூலுள் ஒதியவாற்றான் ஆராய்தல். இவ்விருபத்தைந்துமல்லது உலகெனப் பிறிதொன்றில்லை யென உலகினதுண்மை யறிதலின், அவனறிவின் கண்ண தாயிற்று” எனச் சாங்கியர் கூறும் இருபத்தைந்து தத்துவங் களை வகைப்படுத்துரைக்கின்றார். அவர் கூற்றுப்படி தத்துவத் தோற்றம் பின்வருமாறு அமையும்.

மூலப்பகுதி பகுதியே புருடன் - பகுதியும் அன்று

விகுதியும் அன்று

மான்

| பகுதியும் விகுதியும் என

அகங்காரம் இரண்டுமாவன

|

தன்மாத்திரை

i ; { l

மனம்1 ஞானேந்திரியம் 5 கன்மேந்திரியம் 5 பூதங்கள் 5