பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இவை பதினாறும் விகுதியேயாவன.

விசும்பினின்று வளியும், வளியினின்று தீயும், தீயினின்று நீரும், நீரினின்று நிலமும்தோன்றின என்னும் வேதநூற் கொள்கையை அடியொற்றிய நிலையில் ஐம்பெரும் பூதங்கள் கால் என்ற பெயரால் 3 ஆம் பரிபாடல் 77ஆம் அடியில் குறிக்கப்பெற்றன என்பது பரிமேலழகர் தரும் விளக்கமாகும். சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் தன்மாத்திரையினின்றும் முறையே ஐம்பெரும் பூதங்களும் தோன்றின என்னும் சாங்கியர் கொள்கையொடு இங்கு எடுத்துக் காட்டிய வேதநூற் கொள்கை வேறுபடுதல் காணலாம். பிரமத்தினின்று ஆகாயமும், ஆகாயத்தினின்று வளியும், வளியினின்று தீயும், தீயினின்று நீரும், நீரினின்று நிலமும் தோன்றின என்னும் வேத நூற்கொள்கை சாங்கியர்க்கு உடன்பாடன்று. சாங்கியர் கூறும் இருபத்தைந்து தத்துவப் பாகுபாடு வைதிகர்க்கு உடன் பாடன்று. சங்ககாலத்து வைணவ சமயத்தினர் எல்லா வற்றிற்கும்.அடிப்படையாகத் தத்துவம் இருப்தைந் தென்றும் சாங்கியர் கொள்கையைப் பொதுவாக உடன் பட்டனர் எனினும் ஐம்பெரும் பூதங்களின் தோற்றம் பற்றிக் கூறும் பொழுது விசும்பு முதலாகிய அவை ஐந்தும் ஒன்றினொன்று தோன்றின என்னும் வைதிக நூல் கொள்கையே தழுவினர் என்பது,

& - - w 35 “பாழ்எனக் காலெனப் பாகென

எனவரும் பரிபாடற் றொடராலும் கால் என்னும் சொற்குப் பரிமேலழகர் தரும் உரைவிளக்கத்தாலும் உய்த்துணரப்படும்.

“இந்நிலைத் தெரிபொரு டேரி னிந்நிலை

நின்னிலைத் தோன்றுநின் றொன்னிலைச் சிறப்பே'

(பரி. 2, 26-27)

எனவரும் பரிபாடற் றொடரில் "தெரிபொருள் என்றது உலகப் பெருள்களைத் தெரிந்துணரும் தன்மையினதாகிய உயிர்த் தொகுதியை. தெரிபொருள் என்னும் வினைத் தொகை தெரியும் பொருள் என நிகழ்காலத்தான்