பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

203


விரிக்கப்படும், உயிர்ப்பொருட்கு உணர்தற் பண்பு இயற்கை யாதலின்’ எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் பரிபாடலிற் காணப்படும் ஆன்மாவின் இலக்கணத்தை நன்கு புலப்படுத்தல் காணலாம். 'உயிர் எத்தன்மைத் தெனின் உணர்தல் தன்மைத்து’ எனவரும் சேனாவரையர் உரைத் தொடரும் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

“நின்னடி

தலையுற வணங்கினேம் பன்மாண் யாமும் கலியி னெஞ்சினே மேத்தினேம் வாழ்த்திலே . கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் கொடும்பா டறியற்க வெம்மறி வெனவே”

(பரி. 2:72-73)

எனக் கீரந்தையார் என்னும் புலவர் திருமாலைப் பரவி வேண்டுகின்றார். இறைவனாகிய நின்னடியைத் துளக்க மில்லாத நெஞ்சினேமாய் வணங்கிப் பலகாலும் எம் சுற்றத்தோடும் சுற்றத்தோடும் ஏத்தி வாழ்த்தி எம் அறிவு தவறான நெறியில் வளைதலை அறியாதொழிக! என வேண்டிக் கொள்கின்றோம்” என்பது இத்தொடரின் பொருளாகும். கடும்பு : சுற்றம்; கடும்பொடும் கடும்பொடும் என்னும் அடுக்கு பன்மை குறித்து வந்தது. 'எம் அறிவு தவறான நெறியில் வளையாதொழிக’ எனப் புலவர் வேண்டுத லால், உயிர்களின் அறிவு பொறிவழியே கோட்டமடையும் சிறுமையுடைத்து எனவும், எம்மறிவு அங்ங்னம் கோடுதலை அறியாதொழிக! என இறைவனை வேண்டவே, அம் முதல்வனதருளால் தமக்கு வீடுபெறுதற்குச் சாதனமாகிய மெய்யுணர்வு கிடைத்தல் வேண்டும் எனவும் வேண்டினார் ஆயிற்று. எனவே, சிற்றறிவுடைய உயிர்களுக்கு மெய்யுணர் வளித்துப் பிறவிப் பிரிைப்பினின்றும் நீக்கி வீடுபேற்றின்பம் வழங்கவல்ல தகுதி இறைவன் ஒருவனுக்கே உரியது என்பதும் கூறினாராயிற்று. எம்மறிவு கொடும்பாடறியற்கவென மெய்யுணர்வினையே வேண்டினார். வீடு அதனாலல்லது எய்தப்படாமையின் எனவரும் பரிமேலழகர் உரைவிளக்கம் இங்கு மனம்கொளத்தக்கதாகும்.

சிவபெருமான் நிலம், நீர், நெருப்பு, வளி , வான்,