பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

205


அறிவேன் எனமேற்பட்டுச் செல்லும் வன்மையுடையது அகங்கார மாதலின் அது வலி எனப்பட்டது. "வலியுடையதனை வலி என்றார்’ எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் இவ்வகக்கருவியின் இயல்பின்ை நன்கு புலபடுத்தல் காண்க. இங்கு உணர்வு என்றது உணருங் கருவியாகிய புத்தியினை. ஒரு பொருளைப் பற்றும் அகக்கருவி மனம் எனவும், இதனையான் அறிவேன். எனமேற்கொண்டெழும் கருவி அகங்காரம் எனவும், நிச்சயிக்கும் கருவி புத்தி எனவும் கூறுப. அகக்கருவிகளாகிய இவற்றின் இயல்பினை உய்த்துனரும் நிலையில் வலியினும் மனத்தினும் உணர்வினும் எனவரும் இத்தொடர் அமைந்திருத்தல் கூர்ந்து நோக்கற்பாலதாகும். மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்னும் உட்கருவிகள் நான்கு. இவை அந்தக்கரணம் எனப்படும். இவற்றுள் மனம் என்பது ஐம்பொறிகளால் அறியப்பட்ட பொருள்களில் இது யாதாகற்பாலது என நினைத்தற்கும், இதுவோ, அதுவோ என ஐயுறுதற்கும், கருவியாய் நிற்பது. ஒன்றனைப்பற்றி இஃது எத்தன்மையது என நினைக்கும் நிலையில் மனம் எனவும், இதுவோ அதுவோ என விகற்பித்துணரும் நிலையில் சித்தம் எனவும், பெயர் பெறும் என மனத்தின் விருத்தியாகிய சித்தத்தை மனத்துள் அடக்கி அந்தக்கரணம் மூன்று எனவும் எண்ணுதல் மரபு.

இறைவனது இயல்பினை உள்ளவாறு அறிவார்க்கும் இவர் பகைவர் இவர் நட்டோர் என்னும் வேறுபாடு அம் முதல்வனுக்கில்லை என்பது தெளிவாகப் புலனாகும். இந்நுட்பம்,

"பகைவரிவரிவர் நட்டோ ரென்னும்

வகையு முண்டோநின் மரபறி வோர்க்கே’

(பரி. 3 57, 58)

எனவரும் பரிபாடற் றொடரால் உணர்த்தப் பெற்றமை காணலாம். இத்தொடர் வேண்டுதல் வேண்டாமையிலான்’

எனவரும் தெய்வப்புலவர் வாய்மொழியினை அடியொற்றி அமைந்துள்ளமை காணலாம்.

எல்லாம் வல்ல இறைவன் உயிரறிவினாற் காண்டற்