பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

209


“சுவை முதலாகிய புலன்களும் அவற்றை நுகரும் கருவியாகிய ஐம்பொறிகளும் நீயே. ஒசை ஒன்றினால் உணரப்படும் விசும்பும், ஓசையும் ஊறுமாகிய இரண்டினால் உணரப்படும் காற்றும், ஓசை ஒளி ஊறு என மூன்றினால் உணரப்படும் தீயும், ஓசை ஒளி ஊறு சுவை என்னும் நான்கினால் உணரப்படும் நீரும், ஒசை ஒளி ஊறு சுவை நாற்றம் என ஐந்தினால் உணரப்படும் நிலமும் ஆகிய ஐம்பெரும் பூதங்களுமாக விளங்குவோன் திருமாலாகிய நீயே. ஆதலால், மூலப்பகுதியும், அறனும், அநாதியான காலமும், ஆகாயமும், காற்றோடு கனலும் கூடிய இம்மூவேழுலகத்து உயிர்க ளெல்லாம் நின்னிடத்தனவாயின” எனத் திருமாலை முன்னிலைப்படுத்திப் போற்றும்நிலையில் அமைந்தது,

66 o - - -

சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு

அவையும் நீயே அடுபோ ரண்னால் அவையவை கொள்ளுங் கருவியும் நீயே முந்தியாங் கூறிய ஐந்த னுள்ளும் ஒன்றனிற் போற்றிய விசும்பு நீயே இரண்டின் உணரும் நீரும் நீயே ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே அதனால, நின்மருங்கின்று மூவே ழுலகமும் மூலமும் அறமும் முதன்மையி னிகந்த காலமும் விசும்புங்காற்றொடு கனலும்”

(பரி. 13 : 14 - 25)

எனவரும் பரிபாடற்பகுதியாகும்.

“பாரிடையைந்தாய்ப்பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி”

(போற்றித் திருவகவல்)

என வரும் திருவாசகப் பகுதி இங்கு ஒப்புநோக்கற் பாலதாகும்.

சை. சி. சா. வ. 14