பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

211


எனத் திருமாலைக் குறித்து நல்லெழுநியார் போற்றுவதாக அமைந்த தொடர் நன்கு புலப்படுத்துவதாகும். “தோன்றியதும் தோன்றுவதும் தோன்றா நின்றதுமாகிய காலக் கூறுபாடுகளைக் கடந்து அவை தாம் பொருந்திய தாள் நிழலையுடையை’ என இத்தொடர்க்குப் பொருள் வரைந்தார் பரிமேலழகர். கடந்து அவை அமைந்த என்புழி ‘அவை என்றது, எக்காலத்தும் அழியாது நிலைபேறுடைய உயிர்த்தொகுதியினை, இருமை வினையும் இல ஏத்தும் அவை என அடுத்துவரும் அடிக்கு நின்னையேத்தும் அன்பர் இருவினையும் உடையரல்லர்’ எனப் பரிமேலழகர் எழுதிய உரையால் இந் நுட்பம் இனிது புலனாதல் அறியற்பாலதாகும்.

மனங்கமழுந்துழாய் Ꭵ £ᎼfᎢ ©ö ❍ ☾ö ü ; யணிந்த மாயோனாகிய இறைவன் அருளால் வெளிப்பட்டுக் கொடுப்பினல்லது பிறிதொன்றிற்கில்லாத சிறப்பினையுடைய துறக்கவுலகம் உயிர்களது அறிவுமுயற்சியாற் சென்றடைதற் குரிய எளிமையுடையதன்று; அங்ங்னம் அரிதிற்பெறு துறக்கத்தை அன்பராயினார் எளிதிற் பெற்று இன்புறும் நிலையில் திருமால் எழுந்தருளிய மாலிருங்குன்றத்தை எல்லாருங் கேட்க ஏத்தக்கடவோம் என்று அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

& 4 a • - - r

நாறினர்த் துழாயோன் நல்கினல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம் அரிது பெறுதுறக்க மாலிருங் குன்றம் எளிதிற் பெறலுரிமை யேத்துகம் சிலம்ப”

(பரி. 15:15-18)

எனவரும் பரிபாடற் பகுதியாகும்.

“அவனருளாலே அவன்தாள் வணங்கி” (சிவபுராணம்)

என வரும் மணிவார்த்தை இங்கு ஒப்புநோக்கி யுணரத் தக்கதாகும்.

அசையும் அருவி மிக ஆரவாரித்து இழிதலாற்