பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சிலம்பாறு அழகு செய்த வியக்கத்தக்க தன்மையது, திருவென்னுஞ் சொல்லோடும் மாலிருங்குன்றம் என்னுஞ் சொல் தொடர்ந்த மொழியாகிய திருமாலிருஞ்சோலை மலையெனவும், அதன் பெயரது பெருந்தன்மை நன்றாகப் பூமியின்கண் பரக்க எனவும், நிலைபெற்ற குளிர்ச்சியை யுடைய இளவெயில்சூழ அதனிடையே இருள் வளர்தலை யொக்கப் பொன்னாடையுடுத்தோனாகிய திருமால் தன் தமையனாகிய பலதேவனோடும் அமர்ந்து நிற்கும் நிலையை மக்களே நினைந்து போற்றுமின் எனவும், சுனையிட மெங்கும் நீலமலர் மலர்ந்து தோன்ற அச்சுனை யினைச் சூழ்ந்த அசோகமரங்கள் மலர்தலாலும் காய்கனிகளோடு நிறம் மாறுபட வேங்கை மலர்தலாலும் மாயோனை யொத்த இனிய தெய்வத்தோற்றத்தையுடையது அம்மலை யெனவும், அது கான மயக்கமுதலிய குற்றங்களைறுப்பதாகிய வழிபடு தெய்வம் எனவும் திருமாலைச் சென்று தொழ மாட்டாதீர் அம்மலையினைக் கண்டு பணிமின்; அதனை நும் மனைவிய ரோடும் இருமுது குரவரோடும் குழந்தைகளோடும் சுற்றத் தாரோடும்கூட அம்மலையைத் தெய்வமாக மதித்துத் திசைநோக்கித் தொழுமின் எனவும் பதினைந்தாம் பரிபாட லில் இளம் பெருவழுதியார் உலக மக்களை நோக்கிக் கூறும் நிலையில் அமைந்த அறிவுரை, சங்ககாலத் தெய்வ வழி பாட்டில் மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூவகை வழிபாடும் இடம்பெற்றிருந்தமையை இனிது புலப்படுத்தல் காணலாம்.

அவுனரை நேரே பொருது கொன்றானாகிய திருமால் வீற்றிருக்கும் அம்மலையின்கண் மரக்கிளைகளின் இடத்தவாகிய மயில்கள் அகவவும், குருக்கத்தி இலையுதிர அதன்கண் இருந்து குயிலினம் கூவவும் முழைக்கண் சிலம்புகின்ற இசை சுருதியையுணர்த்துகின்ற குழலொழியும் மிடற்றுப்பாடலும் முழவோசையும் எதிர்ந்தாற் போன்றன.

“பகர்குழல் பாண்டில் இயம்ப அகவுநர்

நாநவில் பாடல் முழவெதிர்ந்தன்ன, சிலம்பின்’

- [15:42-4]

என்று உவமை கூறினமையால் தெய்வ வழிபாட்டில்