பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

213


குழலொலியும் தாளமும் மிடற்றுப் பாடலும் முழவோசையும் இடம் பெறுவன என்பது பெறப்படும்.

தனது உந்தித் தாமரையொக்கும் கண்னை யுடையனாய் நீர் கொண்ட கார்முகிலும் இருளும் நீல மனியும்போலும் திருமேனியனாய் எல்லாவுலகினும் வெளிப்பட்டு அவ்விடத்து வாழும் உயிர்த்தொகுதிகளின் மயக்கத்தைச் செய்யும் பிறவித் துன்பத்தைக் களைவோன் அன்பினால்இருங்குன்றத்தின்கண் எழுந்தருளியுள்ளான் என்பதனை விளக்குவது,

“பு:வத் தாமரைபுரையுங் கண்ணன்

வெளவற்காரிருள் வயங்குமணி மேனியன் எவ்வயினுலகத்துந் தோன்றியவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங்களைவோன்

அன்பது மோய் இருங்குன்றத்தான்” (பரி. 15:49-53)

எனவரும் பரிபாடற் பகுதியாகும். திருமாலின் அர்ச்சாவ தாரத்தை விரித்துரைப்பதாகிய இப்பகுதியில் எவ்வயி னுலகத்தும்’ எனச் சகமாகிய உலகமும் 'மன்பது’ எனச் சீவனாகிய உயிர்த் தொகுதியும், மன்பது மறுக்கத் துன்பங்களைவோன்’ எனப் பரமாகிய இறைவனும் ஆக முப்பொருளுண்மை குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

திருமால் முழுமுதற் பொருள் என்னும் தன் இறைமை நிலையில் இருந்து கொண்டே உலகில் முதலினும் இடையினும் இறுதியினும் படைப்பு அளிப்பு, அழிப்பு என்னும் தொழில் வேற்றுமை பற்றி உயிர்களை உய்வித்தற் பொருட்டுப் பல்வேறு பிறப்புக்களை யுடையனாக இவ்வுலகிற் பிறந்தருளுதலாகிய அவதாரங்களை மேற் கொள்கின்றான் என்பதும் அங்ங்னம் அருள் காரணமாக இவ்வுலகிற் பிறப்பினும் அவ் அவதாரங்கள் அனைத்தும் அவனது இச்சை வயத்தால் கொள்ளப்படுவனவேயன்றி ஏனையுயிர்களைப் போன்று தன்னைப் பிறப்பிப்பார் ஒருவருமில்லாத் தனிமுதல்வன் திருமால் என்பதும் வைணவ சமயக் கோட்பாடாகும்.