பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“முதன்முறை இடைமுறை கடைமுறை உலகத்துப்

பிறவாப்பிறப்பிலை பிறப்பித் தோரிலையே”

(பரி. 3:71, 72)

எனவரும் பரிபாடலடிகளும், 'உலகில் முதலினும் இடையினும் இறுதியினும் படைப்பு அளிப்பு அழிப்பு என்னுந் தொழில் வேற்றுமைபற்றிப் பிறவாப் பிறப்புடையையல்லை; அங்ங்னம் பிறந்து வைத்தும் பிறப்பித்தோரை உடையை யல்லை” எனவரும் பரிமேலழகருரையும் இக்கொள்கை யினை விளக்குதல் அறியத்தகுவதாகும்.

உயர்வறவுயர்ந்த முழுமுதற் பொருளாற் பெறும் வீடுபேற்றினைப் பெரும்பெயர் எனவழங்குதல் தமிழ் மரபு. ‘அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருக (269) என்பது திருமுருகாற்றுப்படை. ‘பிறர்க்குப் பெறலரிய பெரும் பொருளையுடையமுருக என்பது இவ்வடியின் பொருள். பெயர்-பொருள். பெரும் பெயர் - பெரும்பொருள். 'பெரும்பொருள்” என்றது வீடுபேற்றினை என்பர் நச்சினார்க்கினியர். திருமாலிருஞ்சோலை மலையில் காத்தற் கடவுளாகிய திருமால் கண்ணனும், நம்பி மூத்தபிரான் ஆகிய பலதேவனும் என இருவராக எழுந்தருளி பெறுதற்கு அரிய வீடுபேற்றினைத் தன்னடியார்க்கு வழங்க வல்ல பேரருளாள ராகத் திகழ்தலின் பெரும் பெயர் இருவராகிய அவ்விரு வரையும் வழிபட்டு இக்குன்றத்து அடியின்கண் உறைதல் எமக்கு எய்துக வென்று தொழுதுவேண்டுதும் என்பார், 'இருங்குன்றத் தடியுறையியைகெனப், பெரும் பெயரிரு வரைப் பரவுதுந் தொழுதே (பரி : 15 : 65-66) எனப் போற்று வர் இளம் பெருவழுதியார்.

சங்கச் செய்யுட்களில் திருமாலைக்குறித்தனவாக அஞ்சன உருவன், அரவனை அசைஇய நேமியான், ஆழி முதல்வன், ஆழியான், ஆலமர் கடவுள், சேவலோங்கு உயர் கொடியோன், ஞால மூன்றடித்தாய முதல்வன், திகிரிச் செல்வன், திகிரியோன், திருமறுமார்பன், துழாய்ச் செல்வன், துழாய் மார்பினன், துழாயோன், துளபஞ்சூடிய அறிதுயி லோன், நிலந்தரு திருவின் நொடியோன், நீனிற வண்ணன்,