பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


போற்றப்பெற்றமையும் ஆகிய திருமாலின் அவதார நிகழ்ச்சிகள் பரிபாடலில் இடம் பெற்றுள்ளன. கண்ணன் தொழுநை ஆற்றில் நீராடும் ஆய மகளிருடைய ஆடையைக் கவர்ந்து குருந்தில் மேல் ஏறி அமர்ந்தபோது அங்கே பலதேவன் வரக்கண்டு அக்குருந்தின் கிளைகளைத் தாழ்த்தி ஆயமகளிர்தழை உடையால் தம் அற்றம் மறைக்குமாறு செய்ததும், தன் ஊர்தியாகிய கருடன் செங்கண்மாலே எனக் கதறும்படி அவனைத் தன் கால் விரலாலே அழுத்தியதும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் பரசுராமனாகிய மழுவாள் நெடியோன் மன்னர் மரபினரைக் குலமறக் கொன்று வேள்வி செய்ததும் ஆகிய செய்திகள் சங்கச் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உலகம் எல்லாவற்றையும் தோற்றி ஒடுக்கும் முழுமுதற் பொருளாகிய சிவபெருமானும், காத்தற் கடவுளாகிய திருமாலும் ஒருவரே என உணர்த்தும் முறையில் பண்டையோரால் வழிபடப்பெற்ற சங்கர நாராயணர் திருமேனி, செந்நிற அந்திவானமும், கருநிறக் கடலும் ஒருங்குசேர்ந்த இயற்கைத் தோற்றத்திற்கு உவமையாக அகம். 360-ஆம் பாடலில் ஆளப்பெற்றுள்ள குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் சிவபெருமான் திருமேனியும் திருமால் திருமேனியும் அவற்றிடையே பொருளால் வேறுபாடில்லை என்னும் ஒருமைத் தன்மை இனிது புலனாதல் காணலாம்.

திருமகள்

திருமால் வழிபாட்டில் திருமாலின் தேவியாகிய திருமகளும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய நான்முகனும், திருமாலின் மக்களாகக் காமன், சாமன் என்பவர்களும் சார்பு நிலைத் தெய்வங்களாக இடம் பெற்றுள்ளனர். திருமாலின் தேவியாகிய திருமகள் அம்முதல்வனது மார்பில் அமர்ந்துள்ளமை

“செய்யோள் சேர்ந்ததின் மார்பின் அகலம்’ (பரி.)

எனவும்,

“மாயவன் மார்பில் திருப்போல” (கலி.)