பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

217


எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களில் குறிக்கப் பெற்றது. திருமகளாகிய தேவியைத் தன் மார்பகத்துக் கொண்டமை பற்றித் திருவமர் மார்பன்' எனவும் "திருமறு மார்பன்' எனவும் திருமால் போற்றப் பெற்றுள்ளார்.

திருமகள் தன் இரு மருங்கும் இரண்டு யானைகள் நின்று பூநீர் மேற்சொரியச் செந்தாமரை மலர்மேல் எழுந்தருளியிருக்கும் தோற்றம்,

"கதிர்விரி கனை சுடர்க்கவின்கொண்ட கடுஞ்சாரல்

எதிர்எதிர் ஓங்கிய மால்வரை யடுக்கத்து அதிர் இசையருவிதன் அஞ்சினை மிசைவீழ முதிரினர் ஊழ்கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை புரிநெகிழ் தாமரை மலரங்கண் விறெய்தித் திருநயந்திருந்தன்ன தேங்கமழ் விறல் வெற்.”

(கலி. 44)

எனவரும் குறிஞ்சிக் கலியில் உவமையாக க்தாளப் பெற்றுள்ளது. எதிரெதிரே ஓங்கிய பெருமை ையுடைய மலையினது அகற்சியையுடைய சாரலில் இள ஞாயிற்றினது விரிகின்ற கதிர்களையுடைய அழகிய மாணிக்கப் பாறையிலே வளர்ந்து நிற்கப்பட்டு முழங்குகின்ற ஒசையினை உடையவாய் இருபக்கத்து மலைகளினின்றும் வீழ்கின்ற அருவி தன் அழகிய கிளைகளிலே வீழ்தலாலே முதிர்ந்த பூங் கொத்துக்கள் அலர்தல் கொண்ட முழவு போலும் அடியினையும் நெருப்புப் போலும் பூக்களையும் உடைய வேங்ககைமரம் புள்ளி பொருந்திய மத்தகத்தினையும் அழகினையும் உடைய இரண்டு யானைகள் இரு மருங்கும் நின்று பூவொடு கூடிய நீரைச் சொரியா நிற்க, எக்காலமும் முறுக் கவிழ்ந்து மலர்ந்துள்ள செந்தாமரை மலரினது அழகிய அகவிதழிலே வீறு பெறத் திருமகள் விரும்பி எழுந்தருளி யிருந்தாலொத்த தேனாரும் வெற்றியினையுடைய வெற்பனே என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். மாணிக்கப் பாறைக்குச் செந்தாமரை மலரும், அதன் நடுவே பொன்மலர்பூத்த தோற்றமுடைய வேங்கை மரத்துக்குத் திருமகளும், அம்மரத்தின் இருபுறத்தும் அருவி நீரைச்