பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எழுந்தருளிய சிவபெருமானை வணங்கச் செல்லும் நான்முகன் அங்கு எழுந்தருளிய இளங்குழந்தையாகிய முருகப் பெருமானை வணங்காது சென்றானாக, அந்நிலையில் முருகப் பெருமான் நான்முகனை அழைத்துப் பிரணவத்தின் பொருள் யாதென வினவ, நான்முகன் பொருள்கூற அறியாது மயங்கியநிலையில் அவனைச் சிறையிலடைத்து அவனுக்குரிய படைத்தற் றொழிலைத் தானே மேற்கொண்டருளினான் எனக் கந்தபுரனாம் கூறும். முருகப் பெருமான் அவுனரை அழித்துத் தேவரைக் காத்தருளிய நிலையில் விண்னோர்க்கரசன்ாகிய இந்திரன் தன்மகள் தெய்வயானையாரை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தவிடத்தே, முருகன் தன் கையிலுள்ள வேலை நோக்கி நமக்கு எல்லாம் தந்தது இவ்வேல் என்று கூறியருள, அருகே இருந்த நான்முகன் இவ்வேலிற்கு இந்நிலை என்னால் வந்ததன்றோ?' என்றானாக, அதனைக் கேட்ட முருகன் நம்கையில் வேலுக்கு நீ கொடுப்பதொரு சக்தி உண்டோ?’ என்று சினந்து இவ்வாறு கூறிய நீ மண்ணிடைச் செல்வாய்’ எனச் சபித்தனன் எனவும், அயனது சாபத்தை நீக்கியருள வேண்டும் என முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளுதற் பொருட்டே திருமால் முதலிய தேவர்கள் ஆவினன்குடியை அடைந்தனர் எனவும் நச்சினார்க்கினியர் ஒரு கதையினைக் குறிப்பிடுகின்றார், இக்கதைக்குரிய ஆதாரம் இன்னதென்று அறிந்துகொள்ள இயலவில்லை. அது எவ்வாறாயினும் திருமால் முதலியோர் முருகப் பெருமான் எழுந்தருளிய திருவாவினன்குடிக்கு வந்ததன் நோக்கம் நான்முகனிடத்தே முருகப்பெருமான் கொண்டுள்ள வெகுளியைத் தனித்தற்பொருட்டே என்பது ‘நான்முக ஒருவற் சுட்டி’ என்ற தொடரால் நன்கு துணியப்படும்.

சிவபெருமான் முப்புரங்களை அழித்தற்கு வைய மாகிய தேரினை ஊர்ந்து புறப்பட்டபோது நான்முகன் தேர்ப்பாகனாக இருந்து அத்தேரைச் செலுத்தினான் என்ற செய்தி,

“ஆதியந்தணன் அறிந்து பரி கொளுவ

வேத மாபூண் வையத் தேர் ஊர்ந்து” (பரி. 5)