பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


புலப்படுத்துவதாகும். இங்ஙனம் அருவுருவத்திருமேனியாகத் திகழும் சிவலிங்கத்தின் அமைப்பினையும் அதனை அகத்தும் புறத்தும் வழிபடுவார் அடையும் நற்பேற்றினையும் விளக்கும் நிலையில்,

“காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய்

நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்

நானாது நேடியமால் நான்முகனுங்கான நடுச்

சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்”

எனச் சேக்கிழார் நாயனார் தரும் விளக்கம் இங்கு மனங்கொளத்தகுவதாகும்.

உலகமுதல்வனாகிய இறைவனைத் தூண் வடிவில் நடுதறியாக நாட்டி வழிபடும் வழிபாடு சங்க காலத்திற்கு முன் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பெற்ற தொன்மை வாய்ந்ததாகும். இன்னவுரு இன்னநிறம் என்றறிய வொண்ணாத இறைவனைச் சிற்றுார்களிலும் பேரூர்களிலும் மக்கள் எல்லோரும் ஒருங்கு கூடும் ஊர்ப்பொதுவிடங்களிற் பலரும் வழிபடும் நிலையில் தூண் வடிவில் நடுதறியாக நிறுத்தி வழிபடுதல் பண்டைத் தமிழர் மேற்கொண்ட முழுமுதற் கடவுள் வழிபாட்டு முறையாகும். ஒரு நாமம், ஒருருவம் ஒன்றுமில்லாத கடவுளைத் தூண்வடிவில் நிறுத்தி மக்கள் எல்லோரும் வேற்றுமையின்றி ஒன்றியிருந்து வழிபாடு செய்தற்குரிய தெய்வநிலையம் கந்துடைநிலை' எனவும் 'பொதியில்' எனவும் சங்கச் செய்யுட்களிற் குறிக்கப் பெற்றுளது. ‘கந்து - தெய்வம் உறையும் தறி’ என்பர் நச்சினார்க்கினியர். கந்து ‘கந்தம்’ எனவும் வழங்கும்." எங்கும் நிறைந்த இறைவனைத் துளக்கமில்லாத கந்துருவில் (தூண் வடிவில்) நடுதறியாக நிறுத்தி வழிபட்டு வந்த இவ்வழிபாட்டு முறையே நாளடைவில் சிவலிங்க

9. சேக்கிழார், பெரியபுராணம், சாக்கிய நாயனார் புராணம், 8.

10. திருமுருகாற்றுப்படை, 226.

11. அகநானூறு, 167.

12. நச்சினார்க்கினியர். தொல், பொருள். புறத். 33.

13. புறநானூறு, 52.