பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உறவு முறையில் வைத்துப் போற்றப் பெற்றுள்ளான்.

“மாஅல் மருகன்’ (பரி. 19 : 57)

எனவரும் பரிபாடற்றொடர் இவ்வுறவுமுறையினைப் புலப்படுத்தல் காண்க.

முருகன் வழிபாடு

மைவரை உலகமாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகத் தொல்காப்பியம் கூறும் சேயோன் வழிபாடு முருகமர் மாமலைகள் எல்லாவற்றிலும் குன்றுதோறாடல் என்ற முறையில் பொதுவாக நிகழ்வதாயினும், கடைச் சங்ககாலத்தில் மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றம், கடற்கரை ஊராகிய திருச்சீரலைவாய், மலையைச் சார்ந்த ஊராகிய திருவாவினன்குடி, திருவேரகம், மலைப்பகுதியாகிய பழமுதிர்சோலை என்னும் திருப்பதிகளே மிகவும் சிறப்பு முறையில் நிகழ்ந்து வந்தது. இச் செய்தி, பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையிலும், எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலிலும் நன்கு விரித்துரைக்கப் பெற்றுள்ளது.

தொல்காப்பியனார் காலத்தில் வள்ளிநாச்சியார்க் குரிய கணவனாகப் போற்றப்பெற்ற முருகப் பெருமான் கடல் நடுவே இருபேருருவினனாய் எதிர்த்து நின்ற அவுனர் தலைவனாகிய சூர்மாவைத் தன் திருக்கையில் ஏந்திய வேற்படையால் தடிந்தும், குருகொடு பெயர்பெற்ற குன்றமாகிய கிரெளஞ்ச மலையைப் பிளந்தும், தேவர்களது துயரைத் துடைத்து வானோர் தவைனாகிய இந்திரன் மகள் தெய்வயானையைத் திருமணம் புரிந்து வள்ளி, தெய்வயானை என்னும் இருவர்க்கும் உரிய கணவனாகவும், ஆலின்கீழ் அமர்ந்து முனிவர்க்கு அறம் உரைத்தருளிய சிவபெரு மானுக்கும், அம்முதல்வனோடு பிரிவின்றி இணைந்த ஆற்றலாய்

"இழையணி சிறப்பிற் பழையோள்” எனவும்,