பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தோன்றிய முருகப் பெருமானை நோக்கிக் கூறும் கூற்று குறிஞ்சி நிலத் தெய்வமாகிய அம்முதல்வனது முற்றுணர்வுத் தன்மையையும், எத்திறத் தோராயினும் தன்னை அன்பினால் வேண்டி வழிபடுவார் பொருட்டு எளிவந்தருளும் அவ்விறைவனது பேரருட்டிறத்தையும் ஒருங்கு புலப்படுத்துதல் உணரத்தகுவதாகும். எங்கள் தலைவிக்கு நேர்ந்த மெலிவு நினது அணங்குதலால் வந்தது அன்று என்பதனை அறிந்து வைத்தும் நின்னை அன்பினால் வழிபடும் வேலன் வேண்டிக் கொள்ளுதலால் கார்காலத்து மலரும் நறிய கடப்ப மலர் மாலையாகிய முடிமாலையை அணிந்து தலைநிமிர்ந்து வெறியாடும் மனையிடத்தே எழுந்தருளிய முருகப்பெருமானே! நீ முற்றறிவினனாகிய கடவுளாயினும் ஆக நிச்சயமாக அறியாமை உடையாய் ஆயினை வாழ்வாயாக!” என வெறியாடு களத்தே வேலன் மேல் ஆவேசித்த முருகப் பெரும்ானை நோக்கித் தோழி கூறுவதாக அமைந்தது இந்நற்றினைப்பாடல். இறைவ னாகிய முருகன் எல்லாவற்றையும் தானே அறியும் முற்றுணர்வுடையன் என்பதனை அறிவுறுத்துவது,

“நின்னணங் கன்மை அறிந்தும்”

என்ற தொடராகும். தன்னை அன்பினால் வழிபடுவோர் பொய்மையாளராயினும் அவர்தம் வேண்டுகோளையும் பொருளென ஏற்று எளிவந்து அருள் புரிதல் அம்முதல்வனது பெருங்கருனைத் திறம் என்பதனைப் புலப்படுத்துவது,

“வேலன் வேண்டவெறிமனை வந்தோய்” என்ற தொடராகும். பேரறிவுப் பொருளாய்ச் சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத கடவுளாயிருந்தும் நினது வாய்மைக்கு மாறாக வெறியாடுகளத்தில் வேலன் மேல் நீ ஆவேசித்துத்

தோன்றியது முற்றுணர்வினன் என்னும் நின் இயல்புக்கு மாறான பேதைமைச் செயலாம் என்பாள்,

%% w

கடவுளாயினு மாக மடவை மன்ற”

என்றாள். தலைவியின் மெலிவுக்கு உண்மையான காரணம் இதுவென உணர வொண்ணாதவாறு நீ இங்கு