பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

235


"இயல் முருகு ஒப்பினை” (அகம். 28)

என அவனுக்கு முருகப் பெருமானை ஒப்புக் கூறுகின்றார். யாவராலும் எதிர்த்து நிற்கலாற்றாத பெருவன்மையும், தீயோரை அழிக்கும் திறத்தில் பெருஞ்சினமும், அன்பர்கள் முன்னியது முடித்தருளும் பேரருளும் படைத்த பெருந் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்தலால் அப் பெருமானைப் பேரழகும் பேராற்றலும் செயல் வன்மையும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற அரசர் முதலியோர்க்கு உவமையாக எடுத்தாளும் மரபு தமிழிலக்கியத்தில் தொன்றுதொட்டு நிலைபெறுவதாயிற்று.

“முருகற் சிற்றத்து உருகெழு குருசில்” (பொருந. 131) “கடம்பமர் நெடுவே ளன்ன மீனி” (பெரும்பாண். 75) “முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்” (பதிற்றுப். 26) “முருகொத்தியே முன்னியது முடித்தலின்’ (புறம். 56) “முருகுறழ் முன்பொடு” (நற். 225) (அகம். 181) “முருகற் சீற்றத் துருகெழு குருசில்” (புறம்.16) “ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்

போல வரும் என் உயிர்” (கலி. 81)

“முருகுறழப்பகைத் தலைச் சென்று”

(மதுரைக் காஞ்சி 181) “முருகன் நற்போர் நெடுவேளாவி' (அகம். 1)

எனவரும் தொடர்கள் இம்மரபினை அடியொற்றியமைந்தன. தீயோரை ஒறுத்தலில் தடுத்தற்கரிய சீற்றமுடையோன் முருகன் என்பது,

滨名

முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும்”

(அகம். 158)

எனவரும் பாடலால் அறியப்படும்.

குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகப் பெருமானது